பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129

பேச்சு மூச்சின்றிப் பிணமாய்க் கிடத்தல்

பேச்சும் மூச்சும் எழுத்தும் எண்ணமும் தமிழாய்க்

கொண்டவர்

பேச்சு மூச்சு இல்லாமற் கிடத்தல்

பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாமல் இருத்தல்

பேச்சைக் கொடுத்து ஏச்சை வாங்குதல்

பேசாத பேச்செல்லாம் பேசுதல்

பேணிக் காத்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; உபசரித்

தல்

பேதமும் பிணக்கும் இல்லாது வாழ்தல்

பேதலித்துத் தடுமாறும் நெஞ்சம்

பேதை முதல் பேரிளம்பெண் ஈறாக உள்ள பெண்கள்

பேய் பிசாசுகள்

பேர் புகழ் பெற விரும்பாதவர்

பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருத்தல்

பேரா இயற்கைப் பெருவாழ்வு - முத்தி

பேராவின்பப் பெருவாழ்வு

பேரானந்தப் பெருவாழ்வு வாழ்தல்

பேரும் புகழும் பெற்றுப் பிறங்குதல்

பேரும் புகழும் விரும்பிச் செயல் புரிதல்

பொக்கும் பொடியும் காற்றில் பறக்கும்

பொக்கையும் போரையுமான திண்ணைகள் (ஆவி)

பொங்கி எழுந்து பொருமுதல்

பொங்கிச் சீறி எழுதல்

பொங்கிச் சுரந்து பெருகும் ஊற்று நீர்

பொங்கித் ததும்பிப் பூர்ணமாகி வழிதல்

பொங்கித் ததும்பி வழிந்தோடுதல்

பொங்கிப் பீறிக்கொண்டு வரும் துக்கம் (கல்கி)

பொங்கிப் பூரித்தல்

9