பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

மேலோங்கி எழுதல்

மேளதாளத்துடன் வரவேற்றல்

மேனி கருகி வனப்பழிய

மை தவழ் மாடம் மலிந்த வீதி (ச 6-2)

மொட்டை மொழுக்குத் தலை

மொண்டி முடங்கள் (பே) - நொண்டி முடவர்கள்

மொத்து மொத்து என்று மொத்துதல் (கல்கி)

மோகமும் மோகத்தில் தாகமும் கொண்டவர்

மோச நாசம் கம்பளி வேஷம்

மோதி இடித்துக் கொண்டு உந்து வண்டியில் ஏறுதல்

மோனை எதுகைகளுடன் பாடுதல்

யாதும் ஊரே யாவருங் கேளிர்

யாரோ ஊர் பேர் தெரியாத ஒருவன்

யாழுங்குழலும் பசுந்தேனும் பாகும் இசைந்து குடி

வாழுந் திருமொழியாள் (ஒரு துறை நாணிக் 20)

யாழுங் குழலும் முழவும் இயைந்தென வீழும் அருவி

(திணைமொழி 50)

யுக்தியாலும் புத்தியாலும் பிழைத்தல்

யோக க்ஷேமங்களை விசாரித்தல்

(பாட்டின்) ரசம் ரம்மியம் அறிந்து

ரத கச துரக பதாதிகளாகிய நாற்படை

ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று (கடைசிக் காலத்

தில்) சொல்லிக் கொண்டிருத்தல்

லொட்டு லொசுக்கு

வக்கு வகை இல்லாத(வன்)

வக்கு வழியில்லாதவன்

வகுத்துத் தொகுத்துப் பார்

வகை தொகையாய்ப் பேசக் கற்றுக் கொள்