பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

கண்ணதாசன் நாடகமாக்க விரும்பினார். பின்னால் இக்கதை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1964- ஜூலை திங்கள் 15ஆம் நாள் ‘பாலும் பாவையும்’ நாவல் மு. பரமசிவம் அவர்களால் நாடகமாக்கப்பட்டு சென்னை இராஜ அண்ணாமலை மன்றத்தில் அரங்கேற்றப்பட்டது.

1967- டிசம்பர் திங்கள் 17ஆம் நாள் சென்னை வானொலியிலும், அனைத்து இந்திய மொழிகளிலும் ‘பாலும் பாவையும்’ நாவல் நாடகமாக ஒலிபரப்பப்பட்டது. அதே ஆண்டில் விந்தன் ‘தினமணி’ கதிர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.

1974- ‘கதிர்’ பத்திரிகையில் சில சோதனைகளுக்கிடையே இலக்கியப் பணியாற்றி வந்தவர் ஒருநாள் எதிர்பாராமல் ஓய்வு பெற்றார்.

1975- ‘வாழ்ந்தாலும் லோ சர்க்கிளோடு வாழ்வேன்; செத்தாலும் லோ சர்க்கிளோடு சாவேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் தமது குடும்பத்துக்கு தம் படைப்புகளையே சொத்தாக்கி விட்டு ஜூன் திங்கள் 30ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மார்புவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

விந்தன் வாழ்ந்த ஆண்டுகள் ஐம்பத்தொன்பதற்கு எண்பத்திரெண்டு நாள்கள் குறைவாகும்.

விந்தன் படைப்புகள்: சிறுகதைகள் முல்லைக்கொடியாள் (தமிழ் வளர்ச்சி கழகத்தின் முதல் பரிசு பெற்ற நூல்), ஒரே உரிமை, சமுதாய விரோதி, விந்தன் கதைகள், இரண்டு ரூபாய், ஏமாந்துதான் கொடுப்பீர்களா?, நாளை நம்முடையது, இதோ ஒரு மக்கள் பிரதிநிதி, நவீன விக்கிரமாதித்தன்

நாவல்கள்: கண்திறக்குமா?, பாலும் பாவையும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, காதலும் கல்யாணமும், சுயம்வரம், தெருவிளக்கு (நிறைவு பெறவில்லை),

வரலாறுகள்: எம்.கே. டி. பாகதர் கதை, சிறைச்சாலை சிந்தனைகள் (நடிகவேள் எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாறு),

கவிதை: பாட்டினில் பாரதம்

புடைநூல்: டசிகோவிந்தம்

குட்டிக் கதைகள்: மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. இன்னும் சில கதைகள் விரைவில் வெளிவரும்

புதிய சிந்தனை: ஒ. மனிதா, புதிய ஆத்திச்சூடி - பெரியார் அடிச்சுவட்டில்

கட்டுரைகள்: வேலை நிறுத்தம் ஏன்?, விந்தன் கட்டுரைகள் (விரைவில் பல கட்டுரைகள் நூலாக வெளிவர உள்ளன.)

திரைப்படங்கள்: வாழப்பிறந்தவள். வசனம் , அன்பு கதை-வசனம் - சில பாடல்கள், கூண்டுக்கிளி - கதை வசனம் - சில பாடல்கள், கல்கியின் பார்த்திபன் கனவு - வசனம், குழந்தைகள் கண்ட குடியரசு - வசனம், சொல்லு தம்பி சொல்லு - வசனம் , மணமாலை - வசனம், குலேபகாவலி சில பாடல்கள்.