பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஏழையின் குற்றம்

47

அவன் மனைவி மக்களும், தங்கையும் இந்தச் செய்தியை முதலில் நம்பவே இல்லை. என்றைக்கும் திருடாதவன், இன்று திருடினான் என்றால் அவர்கள் நம்பினாலென்ன, நம்பாவிட்டாலென்ன? சின்னசாமியை நம்பியிருந்த அவர்கள் நடுத்தெருவில் நிற்க நேர்ந்து விட்டது.

* * *

இந்தச் சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள், செட்டியார் தினசரியைப் பிரித்து, அதில் வெளியாகியிருந்த புது வருஷப் பட்டங்களை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய ஆசை நிராசையாய்ப் போய்விடவில்லை. அவருக்கும் ‘ராவ்பகதூர்' பட்டம் கிடைத்திருந்தது.

அந்தச் செய்திக்குப் பின்னாலிருந்த இன்னொரு செய்தியும் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. அது சின்னசாமிக்கு ஆறு மாதம் சிறைவாசம் கிடைத்த செய்தி தான்!

பணம் படைத்த செட்டியார் செய்ததும் குற்றந்தான்; ஏழை சின்னசாமி செய்ததும் குற்றந்தான்! ஆனால் பலன்?