பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

தகடூர் யாத்திரை


மறமாண்பும் ೭೧-UQ: என்பதை அறிவானாகவே, சேரமான் பெரும்படை ஒன்றைக் கொண்டுசெல்லுதலையே விரும்பினான். போர்க்குரிய எல்லை தொலைவிடத்து ஆதலாலும், போர் - கடுமையாக நிகழ்தல் கூடும் என்பதை அறிந்தமையாலும், சேரமானுக்குத் தான் விரும்பிய அளவிற்குப் படை திரளுமோ திரளாதோ என்ற கவலையும் ஏற்படத் தொடங்கியது. அதனைக் குறிப்பிட்டு அவன் உரையாடியபோது, அங்கிருந்த சான்றோருள் ஒருவர் கூறியது இது. - “அரசே! அறநெறி வழுவாத செங்கோன்மையினாலே, ஆர்வமும் செற்றமும் கொண்டு முறைபிறழ்தலின்றும் தன்னை விலக்கிக் கொண்டு, யாவர்மாட்டும் துன்பந்தருவன செய்தலை விரும்பாத மாறுபாட்டைக் கொண்ட வேலினைக் கைக் கொண்ட மறமன்னர்களது சிறப்பினை, நீயும் அறிவாய் அல்லவோ!' "அத்தகையர், பகைவர்க்கு எதிராக உயர்ந்த படையெழுச்சியானது, படைவீரர்களால் மிக்குப் பெருகியதாக விளங்கிப் புகழ்பெறுவதாக அமையுமே அல்லாமல், தம் சிறப்பினின்றும் குன்றிப் போவது என்பதும் உளதாகுமோ? “ஆகாதாதலின், நின் கவலையை விட்டருள்க’ என்று அச்சான்றோர் உறுதியுரை கூறுகின்றனர். . . இறப்பப் பெருகி இசைபடுவ தல்லாற் சிறப்பிற் சிறுகுவ துண்டோ? அறக்கோலால் ஆர்வமும் செற்றமும் நீக்கிமற் றியார்கண்ணும் இன்னாத வேண்டா இகல்வேல் மறமன்னர் ஒன்னார்க் குயர்த்த படை . (Zу7): : б660 இறப்ப - மிகுதியாக இசைப்படுவது புகழ்பெறுவது. அறக்கோல் - செங்கோல். இகல் - மாறுபாடு. மறமன்னர் மறமாண்பினரான மன்னர். ஒன்னார் - பகைவர். அவர்க்கு உயர்ந்த படையாவது. அவரை ஒழித்தலைக் கருதி உயர்த்த வேற்படை 5. அரசிற் பிறத்தல் 'தன் செங்கோன்மை வழுவாத சிறப்பினால் தனக்கு மிகுதியான படைவலு உண்டாகும்’ என்ற சான்றோரின் சொற்களைக் கேட்டதும், சேரமான் புன்முறுவலுடன் கூறுகின்றான்.