பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

தகடூர் யாத்திரை


இச் செய்யுள்ை, நச்சினார்க்கினியர், தொல்காப்பியப் புறத்திணையியலின், கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்’ என்னும் சூத்திரவுரைக்கண் எடுத்துக்காட்டி 'இது பொன் முடியார் தகடூரின் தன்மை கூறியது' என்பர், அவ்விடத்தே சில பாடபேதங்களுடன் இச் செய்யுள் காணப்படும். அது வருமாறு,

மொய்வேற் கையர் முரண்சிறந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட தெவ்வழி யென்றி வியன்றார் மார்ப வெவ்வழி யாயினும் அவ்வழித் தோன்றித் திண்கூர் எஃகின் வயவர்க் காணின்

புண்கூர் மெய்யின் உராஅய்ப் பகைவர் பைந்தலை யுதைத்த மைந்துமலி தடக்கை யாண்டகை மறவர் மலிந்து பிறர் - தீண்டல் தகாது வெந்துறை யானே!

"மொய் வேற் கையர் முரண்சிறந்து, ஒய்யென வையகம் அறிய வலி தலைக்கொண்டது எவ்வழி?’ எனச் சேரமான் கேட்பதாகவும், அதற்கு, எவ்வழி யாயினும் என்பது முதலாகவரும் பகுதிகளைக் பொன்முடியார் கூறுவதாகவும் கொள்க. . -

IO. வளம் பெருகுக

ஒரு நாடு வளமும் வலிமையும் உடையதென்றால், அது அந்நாட்டின் விளைபொருள் பெருக்கத்தினது அடிப்படையில் கருதவேண்டிய தொன்றேயாகும். நாட்டின் கண் நெல்வளம் குன்றிப்போகப் படைவலிமை மட்டும் பெருக்கிற்றாயின், அந்நாடு விரைவில் அழிவெய்துதலே நேரக்கூடிய தென்பது ஆன்றோரின் முடிபு. -

புறநானூற்றுள் வரும் ஒரேருழவரின் செய்யுள் இதே கருத்தினை வலியுறுத்துவதை நாம் காணலாம். உணவுப் பஞ்சத்தால் நலிந்து கொண்டிருக்கும் நாட்டின் படைப் பெருக்கம், விரைவில் தானாகவே நலிவெய்தலும் நிகழக் கூடியதாகும். இதனால், ஆட்சியாளர்கள் தம் நாட்டின் உழவுப் பெருக்கத்திற்கே தம் திட்டங்களுள் சிறப்புத் தருதல் வேண்டும் என்பதும் தெளிவாகும். -

பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்ற இந்த அடிப்படைக் கருத்தினைத், தகடுர் யாத்திரைச் செய்யுள் ஒன்றும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. போர் மறத்தினால் மலிந்தவனாகிப் பகைவரை அழித்தல் ஒன்றையே கருத்தாகக் கொண்டு பாசறையிட்டு இருந்தவன் சேரமான். சேரநாட்டு