பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

தகடூர் யாத்திரை


"பகைவரது காலாட்களுக்கு எதிராகத் தானும் ஒரு காலாளாகத் தன்னை நினைத்துக் கொண்டு, அவர்களை வெட்டி வீழ்த்துகின்றவனும் அல்லனாயினான்.

களிற்றின் கழுத்துமேல் அமர்ந்துவரும் மேலாட்களைக் காண்பினும், அவரை வெட்டி வீழ்த்த முயல்வானும் அல்லன்.

அவர்களையெல்லாம் வெல்வது தன்னுடைய மேதகு போராண்மைக்கு இழிவென்றே கருதினான் அவன். அச்செயல் தனக்கு நாணுத் தருவதென்றே ஒதுங்கினான் அவன்!

"வலிய போர்க்களிறுகளை வெட்டி வீழ்த்தலாமெனில், அவை விலங்கினமாக, அவற்றையும் வெட்டி வீழ்த்தாது மேற்செல்வான் அவன்!

'தலைவனை வெல்ல வேண்டும் என்று தருக்குடன் மேற்சொல்லும் அவன் சான்றோர் பெற்ற மகன்! செயற்கரிய செய்தலே சிறப்பெனக் கொள்ளும் செம்மாப்பு உடையவன்'

காலாளாய்க் காலா ளெறியான் களிற்றெருத்தின் மேலாள் எறியான் மிகநாணக் - காளை கருத்தினதே என்று களிறெறியான்; அம்ம! தருக்கினனே சான்றோர் மகன்! (புறத் 2ே)

"எண்ணியது முடிக்கும் ஆற்றலுடைய மறவர் பெருந்தகையாகிய அவன், தனக்கு நேரான தகுதியுடையாராகும் வீரர்களுடன் மட்டுமே போருடற்றி வெற்றி கொள்வான்! தனக்குக் குறைந்த தகுதியினர் எதிரிட்டாலும், அவரைப் பாராட்டாது மேற்செல்வான்.” இங்ங்னம் உரைத்துத் தகடுர் மறவரது தகுதி மேம்பாட்டைக் கூறி வியக்கின்றனர் சான்றோர்.

27. காப்பு அமைந்தனன்

தகடூர்க் கோட்டையின் வலியமைந்த காவல் அமைப்புக்கள் பலவற்றையும் பற்றி முன்னர்க் கூறினோம். தகடுர் மறவர்கள் எத்துணை மறமாண்பு காட்டியவராகப் போர் ஆற்றிய பொழுதும், அவர்களுடைய தறுகண்மைத் திறன் எல்லாம், கடல்போலப் பெருகிவந்து அலையலையாக மோதிக் கொண்டிருக்கும் சேரர்படைகளுக்கு எதிரே நெடுங்காலம் நிலைநிற்க இயலவில்லை.

கோட்டை மதில்களை அடுத்துத் தொலைவாகக் காவற்காட்டை யொட்டிப் பல சிறுசிறு காவல் நிலையங்கள் இருந்தன. காவற் காட்டினுள் பகைப்படைநுழைந்து விடாதபடி