பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

தகடூர் யாத்திரை


இந்த நிலைமையிலே தகடூர் மாறுபட்டதைக் கண்டு சான்றோர் வருந்தினர். தகடூர்ப் போரினை நிகழவிடாதே செய்தற்குப் பெரிதும் முயன்ற அவர்கள், தம் முயற்சியின் தோல்வியால் ஏற்பட்ட போரினது அழிபாடுகளைக் கண்டு, பெரிதும் வேதனையுற்றனர். -

வீரன் ஒருவன் களத்தே பெரும்புண் பட்டான். பகைவர் எறிந்த கொல்படை அவனைக் கொல்லவில்லையாயினும், அவனுடைய உடலில் பெரியதொரு புண்ணினை ஏற்படுத்தத் தவறவில்லை. குன்றினும் உயரிய புகழினையுடைய சிறந்த புண் அது! ஏனெனில், பகைவரை எதிர்த்தழிக்கும் முயற்சியிலே பெற்றது! குன்றொத்த மார்பிடத்தே பெற்றது!

அந்த வீரனைக் கட்டிலில் இட்டு, இளையரும் முதியரும் நறிய நெற்றியையுடைய மகளிருமாகக் கூடியிருந்து விழிப்பாகப் பேணி வருகின்றனர். அவனுடைய கள மேம்பாட்டை உரைத்து உரைத்து உவப்புடன் அவனைச் சூழவிருந்து அவனுக்குத் தொண்டு செய்கின்றனர். இரவின் யாமத்தே, ஊரினைக் காவல் செய்துவரும் காவலரும், அவன் வீட்டருகே வந்ததும், சில நற்சொற்களைச் சொல்லியவராகச் செல்கின்றனர். -

நெய் விளக்கு அண்ணயாமல் எரிந்து கொண்டிருக்கின்றது. அவன் மனைவி அதன்கண் பஞ்சுத்திரியை இட்டும், நெய்யினை வார்த்தும் நிலையாகப் பேணி வருகின்றாள். இங்ங்னம், திருந்திய வேலினை உடையவனான அவன், கரிய தழையை யுடைய நொச்சியைச் சூடிப் போர்மேற் சென்றவனான அவன், வீட்டாரின் காவலுக்குள் அமைந்து புண்ணுற்றுக் கிடக்கின்றனன். -

அவனைக் காணும் தமிழ்ச்சான்றோரின் நினைவோட்டம் எங்கெங்கோ செல்லுகின்றது. சான்றோர் பலரையும் விளித்து, அந்த நிலையைக் குறித்து வருத்தமுற்றுப் பேசவும் தூண்டுகின்றது. அங்ங்னம் ஒருவர் பாடிய செய்யுள் இதுவாகும்.

பல்சான் lரே பல்சான் lரே வீழ்ந்த புரிசைச் சேர்ந்த ஞாயிற் கணையிற் று.ார்ந்த கன்றுமேய் கிடங்கின் மல்லன் மூதூர்ப் பல்சான் lரே; பலநாள் வருந்தி யிளையரும் முதியரும் நன்னுதல் மகளிரு மின்னுங்கண் டுவப்ப . யாமங் கொள்வரும் மொழிய மேனாட் கொல்படை மொய்த்த குன்றுயர் விழுப்புண் நெய்யிடைப் பஞ்சு சேர்த்திப் பையெனக்