பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

91


அஞ்சுதக் கண்ளே; யஞ்சுதக் கனளே,

யறுகா வலர் பந்த ரென்ன

வறுந்தலை முதியாள் அஞ்சுதக் கனளே

வெஞ்சமத்து, - -

என்செய், கென்னும் வேந்தர்க்கு

அஞ்சல் என்பதோர் களிறீன் றனளே! (புறத் 7ே3)

- "பகைவர்க்கு வீரத்திருவினனான இவள் மகன் மட்டுமல்லாது, இவளும் அஞ்சுதற்கு உரியவள் என்றுகூறி,

வீரனைப் பயந்த அவள் சிறப்புப் போற்றப்பெறுகின்றது. .

34. ஆற்றலோன் நிலை!

தகடூர்ப் படைமறவர்களுள் ஒருவன் மிகுந்த ஆற்ற லுடையவனாகத் திகழ்ந்தனன். அவன் படைமுகத்து வரவும், அவனது வரவினாலே செருக்குற்றுத் திகழ்ந்த தகடூர் மறவர்கள், எதிரணியில் நின்றிருக்கும் சேரப் படையினரை நோக்கி, அவனுடைய பேராண்மையை உரைத்துக் களிக்கின்றனர்.

“வேல் வடித்தலிலே. வல்லான் ஒருவன் செய்த வகைமைகள்அமைந்த அழகினையுடைய தன் வேலினைக் கொல்லர் செய்யும் தொழில் முடியும்படி கருதிக் கூரிய இலையுடைய அவ் வெற்றிவேலினைக் கையிடத்தே வலமாகக் சுழற்றி ஏந்திக்கொள்க’ என்று சொல்லின், அவ்வினையினை முடித்துக் கொள்ளுங்காலம் வரைக்கும், தன்னுடைய குதிரையையும் விரும்பாதவனாக, அந்த வேலினை வழங்கும் அதனிடத்தேயே கருத்தாயிருப்பவன் இவன்

போர்த்தொழில் மேம்பாடு உட்ைய இவன், போர்ப் பயிற்சியாகிய அறிவோடும் சேர்ந்து விளங்கும் செவ்விய குதிரை மேலோனாகவும், காலிடத்தே விளங்கும் கழலினை உடையோனாகவும், இளையோனாகவும் விளங்குகின்றான்.

"புகழ்மிகுந்த மன்னர்களே! அழலினைப்போல எழுந்து விளங்கும் இவனுடைய வெகுளியினை இகழ்ந்து மேல்வருதலைக் கைவிடுவீராக!” - -

"முன் ஒருகாலத்து நிகழ்ந்த போரினுள், இவன் கையிடத் து வேலினாற் பட்டு வீழ்ந்தோரின் தொகை அளவிடற்கரிது! வீழ்ந்தவரின் மனைவிமார்கள் கைம்மை பூண்பது குறித்து அறுத்த கூந்தற் சுமைகளை ஏற்றிய வண்டிகளுள், அச்சுமை தாங்காது முரிந்துபோயினவே பலவாகும் என்பதனை நீவிர் அறிவீர்களாக o