பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

தகடூர் யாத்திரை


110 - தகடூர்யாத்திரை 47. நொந்து கை விதிர்க்கும்! தகடூர்க் கோட்டை எவ்வளவு பாதுகாவலை உடைய தாயினும் அது முடிவில் சேரமான் பெருஞ்சேரல் இரும் பொறைக்கு வீழ்ந்துவிடக்கூடியதே என்பதனை நயமாக உரைக் கின்றனர் பொன்முடியார். அத்துடன், அந்தக் கோட்டையின் சிறந்த காவல் ஏற்பாடுகளையும் குறிப்பிடுகின்றனர். "மறமாண்புடையர் சேரப் படைமறவர் எனினும், அவர் ஏறிக் கடத்தலுக்கு இடமின்றி, எப்புறமும் நெய்யோடு வெண்சிறுகடுகை அறைத்து அப்பிவைத்து வழுக்கும்படியாகப் பேணப்பட்டிருப்பது, தகடூர்க் கோட்டையின் மதிலாகும். “எந்திரப் பறவைகளைப் பலவாகச் செய்து அங்கங்கே நிறுத்திவைத்துள்ளனர். அவை தம்மை நெருங்கி வருபவரை வதைத்துக் கொல்லக் கூடியன. 'கல்லெறியும் கவண்களும், கடுவேகத்துடன் மோதும் பொறிகளும், தாமே எறியும் வில்லும் அவற்றுக்கு ஏராளமான கணைகளும், மதிற்புறம் எங்கணும் பரப்பியிருக்கின்றனர். இவற்றால் விளையும் கேடுகளும் மிகுதியாக இருக்கும். "பந்தும்பாவையும்பசியவரிகளையுடைய கம்புப்புட்டிலும் எனப்பட்ட பலவும் சென்றுசென்று எறிந்து கொண்டிருக்கும் முதிய மகளிரைப்போல விளங்கும் பொறிகள் பலவற்றையும் அமைத்துள்ளனர். - "இவற்றின் பின்னர்த், தாமே எய்யப் பெற்று வந்து தாக்கும் பெரும் பகழிகளையும் வாயிலிடத்தே தூக்கி வைத்துள்ளனர். "இவற்றை எல்லாம் கருதல் இல்லாத நிலை இப்போது ஏற்பட்டுவிட்டது. என்றாலும், * “நாள்தோறும் வந்து வந்து மடிகின்ற வீரரின் மனைவிமார்கள், வட்டத் தீயிடத்தே மூழ்கி உயிர்துறக்கும் போது, அவர்கள்பால் தோன்றும் தெய்வக் கற்பு நலத்தைக் கண்ட சான்றோர், மீண்டும் மீண்டும் அத்தகையவரை நாள்தோறும் கண்டு, கண்டு, அவரது அத்தகைய சாவிற்கு நொந்து நொந்து கைவிதிர்க்கும் நிலையும் உளதாகின்றது. "தாக்கியழித்தற்கரிய படைப் பெருக்கினை உடையவன் பெருஞ்சேரல் இரும்பொறை. அவன் உழிஞைப் பூவினைச் சூடி முற்றுகையிடுவதற்கு அடையாளமான, தண்ணுமையின் முழக்கினை நாள்தோறும் கேட்கும்பொழுதெல்லாம், எம் கண்கள் கலங்கி, அந்த நினைவினையே கொள்ளுகின்றனவே!