பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

111


மறனுடை மறவர்க் கேறவிட னின்றி
நெய்யோ டையவி யப்பி யெவ்வாயும்
எந்திரப் பறவை யியற்றின நிறீஇக்
கல்லும் கவணும் கடுவிசைப் பொறியும்
வில்லும் கணையும் பலபடப் பரப்பிப்
பந்தும் பாவையும் பசிவரிப் புட்டிலும்
என்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியு
முந்தை மகளிரை யியற்றிப் பின்றை
எய்பெரும் பகழி வாயிற் றுக்கிச்
சுட்டல் போயின் றாயினும் வட்டத்
தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர
நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந்
தாக்கருந் தானை யிரும்பொறை
பூக்கோள் தண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே!

தாக்கருந்தானை யிரும்பொறை பூக்கோள் தண்ணுமை கேட்டொறும் கலுழ்ந்தே, வட்டத் தீப்பாய் மகளிர், திகழ் நலம் பேர நோக்குநீர் நோக்குநர் நொந்துகை விதிர்க்கும் எனக் கூட்டியும் பொருள் கொள்ளலாம்.

48. நாளை ஊர் கொள்வோம்

காவற் காட்டைப் பிடிக்குமுன் சேரப்படை தகடூர் மறவர்களின் கடுமையான தாக்குதலாலும், தகடூர் படைத் தலைவர்களின் போர் நுட்பத் திறனாலும் பெரிதான அழிப்பாட்டிற்கு உட்பட நேர்ந்துவிட்டது. தனது படையின் பேரழிவைக் கண்டதும் சேரமான் தன் அருகே இருந்த அரிசில் கிழாரையும் பொன்முடியாரையும் நோக்குகின்றான்.படைபட்ட தன்மையினைக் கூறுமாறு, கவலையுடன் விசாரிக்கின்றான். அப்போது அவர்கள் கூறுவதாக விளங்கும் செய்யுள் இது.

"கலைமானைப் போன்று பாய்ந்து வந்தன குதிரைகள். மலைகளைப் போன்று ஒன்றுடன் ஒன்று மோதிப் போரிட்டன யானைகள். இன்னொலி எழ, வில்லினை நாணொலி எழுப்பியபடி வில்வீரர்கள் திகழ்ந்தனர்.

“இப்படிப்பட்ட இவைகளை எல்லாம் பலவாகப் புறமிடுமாறு வெற்றிகண்டவர்கள், முன்னாளிலே நம்படை மறவர்கள்.

‘இனி இவர்களுடன் வந்து, இந்தப் போரிலே, இன்று பகைவரைப் புறங்கண்டு, களத்திடத்தே பசும்புண் பெற்றும் விளங்குகின்ற வேந்தனாகிய சேரமானே!'