பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

செந்தமிழ் பெட்டகம்

‘மிட்டானி’, ‘ஈலமைட்டு’, ‘கானசட்டு முதலியோரின் மொழிகட்கும் திராவிட மொழிகளுக்குமுள்ள சில ஒற்றுமையும், ஈரானிலுள்ள காப்பியர்களுக்கும் திராவிடர்களுக்கும், உடலமைப்பில் தோன்றும் ஒற்றுமையும் இக்கொள்கையை வலியுறுத்துகின்றன மத்தியதரை மக்கள் ஈரானுக்கு வந்து, அங்கிருந்து ஒரு கூட்டத்தார் இந்தியாவை அடைந்திருக்கலாம் இங்ஙனம் உடற்கூறு, மொழி, பண்பாடு முதலியவற்றின் ஒற்றுமைகளை அடிப்படையாகக் கொண்டு இக் கொள்கை தோன்றியுளது மேலும் கடவுள் வழிபாடு, கோயிலமைப்பு, கோயில்களில் தேவரடியார் கூட்டத்தை நியமிப்பது முதலியவற்றில் சுமேரியருக்கும் தமிழருக்கும் ஒற்றுமை இருந்துள்ளது

மேற்கு ஆசிய மக்கள் பூமி தேவியை 'மலைப் பெண்’ என்றழைத்து வணங்கியதும், அத் தேவிக்கும் ஆண்டுதோறும் ‘அர்' நகரத்துச் சந்திரக் கடவுளுக்கும் விழா நடத்தியதும் தென்னிந்தியச் சிவனகோயில்களில் இன்றும் நடைபெறும் திருக்கலியாணத்தை நினைவூட்டுகின்றன தொல் பொருளாராய்ச்சியாளர் பர்செபலிஸ் மக்கள் பாம்பை வழிபட்டனரெனக் கண்டுபிடித்துள்ளது தென்னிந்திய வழக்கத்திற்கு முரணானதல்ல அன்றியும், முற்காலச் சமாதிக்குழிக் கட்டடங்கள் மத்தியதரை நாட்டிலும் தென்னிந்தியாவிலும் ஏறக்குறைய ஒரே முறையில் அமைந்துள்ளன ஆனால் தென்னிந்தியச் சமாதிகளில் இரும்புப்பொருள்கள் காணப்பட்டமையால் இவை சற்றுப் பிற்காலத்தைச் சார்ந்தவையா இருக்கவேண்டும்

பாலஸ்தீனம், சைப்பிரஸ் போன்ற இடங்களிலுள்ள பிணக்குழிப் பொருள்களைப் போலவே, திருநெல்வேலி மாவட்டத்து ஆதிச்சநல்லூரில் கண்ட முதுமக்கள் தாழிகளில் பொன்னால் செய்த தலைக்கட்டுக்கள், வாய் மூடிகள் முதலியவை காணப்பட்டுள்ளன ஆனால் ஆதிச்சநல்லூர்க் குழிகளில் இவை