பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

செந்தமிழ் பெட்டகம்

பு, தல், ஆன் ஆள் முதலியவை வேறு கு, ஐ, ஆல் முதலியவை வேறு த், ப் முதலியவை வேறு முறையே விகுதி, வேற்றுமை உருபு, இடைநிலை முதலிய பெயர் களால் இவற்றை இலக்கண நூல்கள் பாகுபடுத்தி எடுத்துரைக்கும், இவை பொருள் வேறுபாட்டை உண்டாக்க உதவும் சொல்லுறுப்புக்கள் பொருள் வேறுபாட்டை உண்டாக்காமல் சொற்களை அமைப்பதற்கு மட்டும் பயன்படுகின்றவற்றைச் சாரியை என்றும் சந்தி என்றும் கூறுவர்

அடிச்சொற்கள் பொருள்களுக்குப் பெயராகாமல் இடம் பற்றிய வேறுபாடுகளை உணர்த்தும்போது பெயர்ச்சொற்களாக வளர்கின்றன (மலர் மலர்கள், மலரை, மலருக்கு, மலரோன், மலராள் முதலியன) அடிச்சொற்கள் தொழிலைப் புலப்படுத்திக் காலம் பற்றிய வேறுபாடுகளை உணர்த்தும்போது வினைச் சொற்களாக வளர்கின்றன (மலர்-மலர்ந்து, மலர, மலரும், மலர்ந்தது, மலர்கின்றன, மலர்ந்தார்) இத்தகைய வளர்ச்சிக்குத் துணையாக வரும் விகுதி, இடை நிலை, வேற்றுமையுருபு, சாரியை என்பவை இன்று பொருள் விளங்காத சொற்களாக உள்ளன ஆனால் அவைகளும் ஒரு காலத்தில் பொருள் தெளிவு உடைய முழுச்சொற்களாக இருந்தவைகளே

கோல்கொண்டு எறிந்தான் என்னும் வாக்கியத்தில் கொண்டு என்பது சொல்லின் பொருள் தெரியும் உருபாக உள்ளது கோலால் எறிந்தான் என்னும் வாக்கியத்தில் ஆல் என்பது சொல்லின் பொருள் தெரியாத உருபாக உள்ளது ஆயினும் இரண்டும் கோல் என்பதன் பொருளை ஒரே வகையாக வேறுபடுத்துகின்றன ஆல் என்பதும் ஒரு காலத்தில் பொருள் தெரிந்த சொல்லாக இருந்து, பிறகு இவ்வாறு உருபாக மட்டும் வழங்கலாயிற்று விகுதி, இடைநிலை, சாரியை முதலியவைகளும் இவ்வாறே தொடக்கத்தில் பொருள் விளங்கிய முழுச்சொற்களாக இருந்தன. இன்று அவை