பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

95


மேற்கூறிய ரஸம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்தாயி பாவத்தால் சமைவது

1. சிருங்காரத்திற்கு ஸ்தாயிபாவம் ரதி (காதல்)
2. கருணத்திற்கு
சோகம்
3. வீரத்திற்கு
உற்சாகம்
4. ரெளத்திரத்திற்கு
குரோதம்
5. ஹாஸ்யத்திற்கு
ஹாஸம் (நகை)
6. பயினகத்திற்கு
பயம்
7. பீபத்ஸத்திற்கு
ஜூகுப்ஸை (அருவருப்பு)
8. அற்புதத்திற்கு
விஸ்மயம் (ஆச்சரியம்)
9. சாந்தத்திற்கு
நிர்வேதம் (விரக்தி)

இந்நிலைபெற்ற பாவமே, ரஸமாகும் உதாரணமாக, நகை (ஹாஸ்யம்) என்னும் பாவத்தினின்று ஹாஸ்யம் என்னும் சுவை தோன்றும் ஆயின் ஆசிரியர் தொல்காப்பியனார் பாவத்திற்குரிய பெயரையே சுவைக்கும் கூறியுள்ளார்

மேற்கூறியவற்றால், உலகியலின்பத்தைச் சுவை யென்று கொள்ளாமல் விடுத்து, நாடகத்திலாவது காவியத்திலாவது அச்செயல்கள் நிகழும்போது அவற்றைக் காண்டலும் கேட்டலும் செய்யும் நல்லறிவாளருள்ளத்தில் விபாவம் முதலியவற்றால் உண்டாகுஞ் சுவையே ரஸம் என்று அலங்கார நூலார் அறுதியிட்டுள்ளனர் என்பது புலனாகும் தாங்-தன் இளமகன் இறந்ததைக் குறித்து அழுதலைக் கேட்குங்கால் நமக்குத் துயர் நேர, சந்திரமதி தன் மகனை நினைந்து அழுததாகவுள்ள செய்யுட்களைப் படிக்கக் கேட்குமிடத்து ஆனந்தம் உண்டாகின்றது அதனானே அச்செய்யுட்களைப் பன்முறை கேட்டும் படித்தும் இன்புறுகின்றோம்