பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

109

பிராகிருதத் தொடர்புடன் எழுந்தவை அவதி, ப்ரஜ்பாஷா முதலியன. மேற்கே இருந்தவற்றின் தொடர்பில் வந்த ராஜஸ்தானி வழியாக விரிந்த மொழிகள் மார்வாரி, குஜராத்தி முதலியன வடக்கே இருந்த பிராகிருதங்களிலிருந்து வளர்ந்தன நேப்பாளி, கர்வாலி, பஞ்சாபி, காச்மீரி, முன்சொன்ன காப்பிரி முதலியன வடமேற்கில் வழங்கிய டார்டிக், பைசாசி இரண்டின் தொடர்பில் வளர்ந்து வந்தவை

இவையல்லாமல் இன்று ஐரோப்பாவில் உலவி வரும் ஜிப்சி சாதியினரின் மொழியும் சமஸ்கிருதத்திலிருந்து எழுந்ததே இந்தச் சாதியனர் வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட ஏதோ நெருக்கடி காரணமாக இந்தியாவிலிருந்து கும்பலாக வெளிக் கிளம்பி வலசை போயிருக்க வேண்டும்

வேதகாலத்துச் சமஸ்கிருதத்திற்கும் பிற்காலத்துச் சமஸ்கிருதத்திற்கும் வேறுபாடுகள் பாத்ததுமே தெரியும் வேதமொழியில் வழங்கிய பல சொற்கள் பின்னால் வழக்கொழிந்துபோயின வேதமொழியில் விகுதிகளும் விகுதகளாலாக்கிய சொல்லுருவங்களும் எவ்வளவு வகைகள் இருந்தனவோ அவ்வளவு பிற்காலத்தில் இல்லாமல், பல கழிக்கப்பட்டுச் சிற்சில உருவங்களே இலக்கணத்தில் வைத்துக்கொள்ளப்பட்டன.

சமஸ்கிருதத்தில் 'செய்துவிட்டு’ என்பதற்குக் 'க்ருத்வா’ என்ற உருவம் ஒன்றே வழங்கப்டும் வேதத்திலோ க்ருத்வா, க்ருத்வி, க்ருத்வாய என்ற மூன்று உருவங்கள் வரும் ‘போக’ என்பதற்குப் பின் சமஸ்கிருதத்தில் ‘கந்தும்’ என்று மட்டும் வரும்; வேதத்தில் நாலாம் விகுதியை வைத்துக் கந்தவே என்றும், அப்டியே ஐந்து ஆறு ஏழு வேற்றுமை விகுதிகள் வைத்த உருவகங்களும் வரும் வேற்றுமை விகுதிகளில் உதாரணமாக முதல் வேற்றுமைப் பன்மை விகுதி பின் சமஸ்கிருதத்தில் 'ஜனா:' என்று மட்டும் வரும். வேதத்தில்