பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

103

உதவுவதுமான பற்பல திறன்களைத் தொகுத்து 64 கலைகளாக வழங்கி, அவற்றிற்கு வேண்டிய நூல்களையும் சமஸ்கிருதம் வளர்த்தது உ-ம். அழகுக்கலைகளான இசையும், ஓவியமும், வீட்டுக் கலையான பாகசாஸ்திரம், வாழ்க்கைக்கு அடிப்படையான மனையடி என்ற வாஸ்து முதலியன

பரம்பொருளை ஆராயப்புகுந்த நூல்கள் வெவ்வேறு வழியை வகுத்ததுமல்லாமல் வாதத்திற்கும் சர்ச்சைக்கும் துணையாகச் சொல், வாக்கியம், பொருள் இவற்றின் ஆராய்ச்சி, பொருள்கள் புலனாகும் வழி, அறிவேற்படும் வகை, அறிவுக்கருவி, அறிவின்-அளவு இவற்றை எல்லாம் கலந்து அளவையியல் என்ற துறையையும் வெகுவாக வளர்த்தது

வேதாந்தத் துறையில் அடைந்த மனவெழுச்சியும். இசைநாட்டியங்களில் காணும் அழகும், சமஸ்கிருத மொழியின் முழுவன்மையும் ஆகியவெல்லாம் சிறக்கக் காணும் துறை காப்பியம் ஆகும் இதில் காளிதாசன், பவபூதி, பாணன், அமருகன் முதலிய கவிகள் இயற்றிய பெருங்காப்பியங்கள், செய்யுள் நிலை, உரைநிலை, சிறு காப்பியங்கள், விடுகவித்தொகைகள் முதலியனவும், காளிதாசன், சூத்திரகன், விசாகதத்தன் பவபூதி முதலியோர் ஆக்கிய நாடகங்களும், ஐயதேவர் போன்றவர் இயற்றிய இசை நாடகங்களும் இம்மொழியிலுள்ள இலக்கியச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டான கற்பனைகளாகச் சொல்லலாம்

சமஸ்கிருத ஒலிகளில் வல்லினம், மெல்லினம், மூச்சொலி வகைகள் பலவிதமாக இருப்பதால் கவிகள் கையாண்டு, கையாண்டு இம் மொழியிலுள்ள ஒலி ஒசைகளைக்கொண்டே பொருள் தொனிக்கும்படி செய்யும் திறனையும், இசைபோல் அமையும் இனிமையையும் இம்மொழிக்குக் கொடுத்திருக்கின்றனர் மொழியின் கட்டினாலும், சொற்களின் வன்மையாலும், சிலேடை-