பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

149


6 காஞ்சி யென்பது வீடுபேறு நிமித்தமாகப் பல வேறு வகைப்பட்ட நிலையாமையைக் கூறுவதாகும். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றின் பகுதியினும் நிலையாமையைக் கூறுவதால், நால்வகை மணமும் கொண்ட பெருந்திணையென்னும் அத்திணைக்கு இது புறனாயிற்று மடலேறுதல் முதலியவை தீயகாமம் ஆயினாற்போல, உலகியலை நோக்க நிலையாமையும் நற்பொருளன்றாயிற்று இதுவும் பெருந்திணை போலத் தனக்கென நிலமும் பொழுதும் வரையறையில்லாதது

இத்திணையில் போர்க்களத்திலே இறந்த வீரர்களைப் பற்றிய பல்வேறு நிலைகளைக் கூறும் மறக்காஞ்சி, பேய்க்காஞ்சி, தொடாக்காஞ்சி, ஆஞ்சிக்காஞ்சி, தொகை நிலை முதலியனவும், வீரர்கள் வஞ்சினங் கூறும் வஞ்சினக் காஞ்சியும், இறந்தவர்களையெண்ணி வருந்திக் கூறும் மன்னைக் காஞ்சியும் அடங்கும் மற்றும் பொதுவாகக் கூற்றுவன் பெருமையைக் கூறும் பெருங்காஞ்சி, முதியோர் இளைஞர்கட்டு உலகியல் கூறும் முதுகாஞ்சியும், கணவன் இறந்தவுடன் உயிர் நீங்கிய மனைவியின் நிலை கண்டார் இரங்கிக்கூறும் மூதானந்தமும், மனைவியையிழந்த கணவனுடைய தபுதார நிலையும், கணவனையிழந்த மனைவியின் தாபத நிலையும், இறந்தவர்களை யெண்ணி மற்றோர் வருந்திக்கூறும் கையறு நிலையும், உறவினர் கூறும் ஆனந்தப் பையுளும், முதுகாட்டை வாழ்த்தும் காடு வாழ்த்தும் போன்றவையாவும் அடங்கும்

7 பாடாண் என்பது பாடுதல் தொழிலையும் பாடப்பெறும் ஆண்மகனையும் நோக்காமல் அவன் ஒழுகலாறாகிய திணையை உணர்த்துவது கைக்கிளை ஒருதலைக் காமமானாற் போலப் பாடுவோன் பரிசிலைக் காதலிக்கப் பாடப் பெறுவோன் புகழையே காதலிக்கிறான் இருவர் காதலும் ஒன்றவில்லை இதுவும் நிலமும் பொழுதும் வரையறையில்லாதது அகத்திணையில்