பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

செந்தமிழ் பெட்டகம்

கல்லை வீசிப் போராடிக் களிக்கும் பரதவர் குப்பம், செம்மறியாடும், கெளதாரியும், பன்றிகளும் விளையாடும் புறச்சேரிகள், தூண்டிற் கோலைச் சாத்தியதில் நிலவிடை இருள்போல மீன் வலை உலருகிற முற்றத்தில் சுறாமீன் கொம்பை நட்டுக் கடவுளை வழிபட்டுத் தாழை சூடிப் பனங்கள் குடித்துப் பெண்களோடு இன்பமாக வாழ்ந்து மலை மேல் தவழும் செம்மேகம் போலக் கடலின்மேல் காவிரி பாயத் தாய் மார்பிலே குழந்தை விளையாடுவது போலக் காவிரியில் அப்பரதவர்கள் விளையாடி வாழுமிடம், இவ்வாறு வானுலகினை ஒத்த பலவகையான காவிரித் துறையினைக் காண்கின்றோம்

காம இன்பம் பெற்ற காதலனும் காதலியும் கடையாமத்தில் கண்ணுறங்குகின்றார்கள் ஆனால், சுங்கம்கொள்வோர் சோர்வின்றிச் சூரியனது தேர் பூண்ட மாப்போலச் சோர்வின்றிச் சுங்கம் வாங்குகின்றார்கள் எற்றுமதியும் இறக்குமதியும் ஆகின்ற அந்தத் துறையில் புலிப் பொறியை மூட்டைகளின்மேல் பொறிக்கின்றார்கள் வெறியாட்டெடுக்கும் ஆரவாரத்தோடு திருவிழா இடையறது நிகழும் கடைத்தெருவில் முருகன் கோயிற்கொடி தோன்றுகிறது கற்றறிஞரது வாதக் கொடிகளும் தோன்றுகின்றன

பல பொருள்களையும் விற்பார் ஒவ்வொரு பொருளுக்குமாக ஒவ்வொரு கொடி கட்டியிருக்கின்றார்கள் கடலில் வந்த குதிரைகள், வண்டியில் வந்த மிளகுகள், வடமலையிலிருந்து வந்த மணியும் பொன்னும், குடமலையிலிந்து வந்த ஆரமும் அகிலும், தென் கடலில் வந்த முத்தும், குணகடலில் இருந்து வந்த பவளமும், கங்கைக் கரையிலிருந்து வந்த வளங்களும், ஈழநாட்டிலிருந்து வந்துள்ளனவும், கீழ்த் தீவுகளிலிருந்து வந்த ஆக்கச் செல்வங்களும் ஆங்கே தலைமயங்கிக் கிடக்கின்றன. கொலையும் களவும் நீங்கிய பெருமையால் வலைஞர் முற்றத்தில் மீன் திரளும்; புலால் விலைஞர்