பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

செந்தமிழ் பெட்டகம்


சைவமும்
வைணவமும்


தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, குறுந்தொகையில் இறுதி இருபது செய்யுள், சீவக சிந்தாமணி ஆகியவற்றிற்குச் சிறந்த உரையெழுதியவர் குறுந்தொகைக்குப் பேராசிரியர் உரையும் , அவர் எழுதாதுவிட்ட இருபது செய்யுட்கு இவர் எழுதிய உரையும் இப்பொழுது கிடைத்தில சிறந்த பல நுால்களுக்கு உரை எழுதிய பெருமையால் இவரைத் ‘தமிழ் மல்லிநாத சூரி ‘ என்பர் வட மொழியில் பல நுால்கட்கு உரை வரைந்தவர் மல்லிநாத சூரி என்பதை வடமொழி வல்லார் அறிவர்

நச்சினார்க்கினியர், மதுரையில் அந்தண வருணத்தில் பாரத்திரத்தில் பிறந்தவர் இவர் பெயர் சிவபிரானுக்குரிய பெயராகும் “நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச்சுரவனுரே” (திருநா தேவாரம்), “நச்சினார்க்கினியாய் போற்றி” (காஞ்சிப்புராணம்) என வந்திருத்தல் காண்க இவர் சிவபிரான் பெயரைத் தம்பெயராகக் கொண்டிருத்தலாலும், திருச்சிற்றம்பலம் பெரும்பற்றப்புலியூர் என்ற சிவத்தலங்களின் பெயர்களை ஆறெழுத்து மொழிக்கும் ஏழெழுத்து மொழிக்கும் உதாரணமாகக் காட்டியிருத்தலாலும், தமதுரையில் திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார் முதலியவற்றினின்றும் மேற்கோள் காட்டியிருத்தலா-