பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

11

யில் அமைந்த பெரிய சுனையில் உண்டான தேனைத் தேன் என்று அறியாது உண்டது ஆண் குரங்கு அதனால் அது பக்கத்தில் உள்ள மிளகுக் கொடி படர்ந்த சந்தன மரத்தில் ஏற மாட்டாமல் பூக்களால் ஆன படுக்கையில் மகிழ்ந்து உறங்கும் இத்தகைய எதிர்பாராத இன்பத்தை நினது மலையில் உள்ள பலவகை விலங்குகளும் எளிதாக அடையும் இத்தகைய சிறப்புடைய நாடனே! நீ எண்ணி அடைய முயலும் இன்பங் கள் உனக்கு எங்ஙனம் அரியனவாகும்? மிகுந்த அழகை யுடைய மூங்கில் போன்ற பருத்த தோள்களையுடைய இவளும், தடுத்து நிறுத்தவும் நில்லாத நெஞ்சுடையவளாய் உன்னிடம் காதல் கொண்டவளானாள் ஆதலால் இனி இவள் தந்தையின் அரிய காத்தல் தொழிலுடைய காவலர் சோர்ந்திருக்கும் பொழுதை மறைவாக உணர்ந்து இரவிலே இவளைக் கூடும் பொருட்டாக வருவதற்கும் உரியவன் ஆவாய்! அன்றியும் பசிய புதர்கள் சூழ்ந்த வேங்கை மரங்களும் ஒளியுடை பூங்கொத்துகள் மலரப் பெற்றன மேலும் வெண் மையான கதிர்களையுடைய திங்களும் வளரும் பருவத்தை அடைந்தது. இவற்றை ஆராய்ந்து செய்யக் கூடியதைச் செய்வாயாக!" என்று பகற்குறி வந்த தலைவனிடம் தோழி அறிவுரை கூறி மணக்க வேண்டினாள்.


379. செல்லாமையே நன்று

ஈயற் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும்,
அரிய அல்ல - மன் - இகுளை! 'பெரிய
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின் ஆங்கண், வழையொடு
வாழை ஓங்கிய தாழ் கண் அகம்பில்
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய,
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு