பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி


உரவுக்கார் கடுப்ப மறலி மைந்துற்று
விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇப்
படைநிலா இலங்கும் கடல்மருள் தானை
மட்டுஅவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்
பொருமுரண் பெறாஅது விலங்குசினம் சிறந்து
செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி
ஒங்குதிரைப் பெளவம் நீங்க ஒட்டிய
நீர்மாண் எஃகம் நிறத்துச்சென்று அழுத்தக்
கூர்மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது
எளியள் அல்லோள் கருதி
விளியா எவ்வம் தலைத்தந் தோயே. - பரணர் அக 212

“என் நெஞ்சே உன்னுடன் வாழ்வது அரிது! வன்மையற்ற மாற்று உயர்ந்த பொன்னால் செய்யப்பெற்ற பாவை, அது வானில் பரவும் இளவெயிலைத் தன்மீது கொண்டு விளங்குவது போல் மிக்க அழகு பொருந்தியவள்; திரண்ட கொத்தாகிய கூந்தலை உடையவள்; நாணற் கிழங்கு மணலில் ஈன்ற முளை போன்ற வெண்மையான கூரிய பற்களை உடைய சிவந்த வாயினள்; யாழில் வல்லவன் இயக்கும் செவ்வழிப் பண்ணின் இசையைக் கேட்டாற் போன்ற மிக இனிய சொற்களை உடையவள். தெய்வத்தின் இயல்புடையவள் இத் தன்மைகள் வாய்ந்த மங்கையை விரும்பிப் பெரிய ஆண் யானைக் கூட்டம் படிந்து கலக்கிய நீரைப் போன்று, கலக்கம் அடைந்த போது, ‘இவள் பெறுவதற்கு அரியவள்!’ என்று எண்ணவில்லை! நாள் தோறும் இடுக்கண் பொருந்திய அரிய அறநெறியைக் கடந்து வந்து என்னைத் துன்பத்துக் குள் ஆக்கினை! இடைவிடாமல் காண்பதற்கு எளியவள் அல்லாத ஒருத்தியை எண்ணிக் கெடாத துன்பத்தை என்னிடத்துக் கொணர்ந்து விட்டனை இத்தகைய நீ -

செங்குட்டுவன், படைக் கருவிகளை யுடைய ஒளிவீசும் பெரிய கடல் போன்ற படையைக் கொண்டவன்; தேன் ஒழுகும் மலையையுடையவன்; அஞ்சாமையுடன் போர் செய்வதில் வல்லவன்; மின்னலால் வானைப் பிளந்து வன்மையுடன் எழும் முகில் போல் பகைத்து வலிமையுடன் பல மொழியும் கலந்து பாசறையைத் தான் வேண்டும் இடங்