பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

75

'

பெற்றிராவிட்டால் எம் தலைவியைப் பிரியாதே!" என்று தோழி வற்புறுத்தினாள்


427. பலமுறை தலைவனைத் தழுவுதல்


அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச்
கரும்புவாய் திறந்த பொன்புரை நுண்தாது
மணிமருள் கலவத்து உறைப்ப, அணிமிக்கு
அவிர்பொறி மஞ்ஞை ஆடும் சோலைப்
பைந்தாட் செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம்
செந்தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்புதர வந்தமை அறியாள், 'நுண்கேழ்
முறிபுரை எழில்நலத்து என்மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும்'என, பல்பிரப்பு இரீஇ
அறியா வேலற் தரீஇ, அன்னை
வெறிஅயர் வியன்களம் பொலிய ஏத்தி
மறி உயிர் வழங்கா அளவைச் சென்றுயாம்
செலவரத் துணிந்த, சேண்விளங்கு, எல்வளை
நெகிழ்ந்த முன்கை, நேர் இறைப் பணைத் தோள்
நல்எழில் அழிவின் தொல்கவின் பெறீஇய
முகில்த்துவரல் இளமுலை மூழ்க, பல்ஊழ்
முயங்கல் இயைவது மன்னோ தோழி!
நறைகால் யாத்த நளிர்முகைச் சிலம்பில்
பெருமலை விடரகம் நீடிய சிறியிலைச்
சாந்த மென்சினை தீண்டி, மேலது
பிரசம் தூங்கும் சேண்சிமை
வரையக வெற்பன் மணந்த மார்பே!

- பேரி சாத்தனார் அக 242

“தோழியே! அரும்புகள் முதிர்ந்த வேங்கை மரத்தின் மென்மையான கிளைகள் அசையும் அவற்றில் வண்டுகள் வாயைத் திறத்தலால் பொன் போன்ற நுட்பமான பொடி கள் நீல மணியைப் போன்ற தோகையில் உதிரும். ஆதனால் அழகு மிகுந்து புள்ளிகளையுடைய மயில் ஆடிடும் சோலை அதன் பக்கத்தில் பசிய தாளினையுடைய சிவந்த தினையின் வளைந்த கதிர்களை உடைய பெரிய கொல்லை அதில் வரும்