பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி


“தோழியே சுரபுன்னை மரங்கள் நிறைந்த மலைச் சாரலில் முகில் வலப்பக்கமாக எழுந்து கூத்தரின் முழவு இன்னியம் ஒலித்ததைப் போன்ற ஒலியைக் கொண்ட இடிகளுடன் கூடி மிக்க மழையைப் பெய்த நள்ளிரவு அவ் இரவில் பாம்பின் பசிய தலையை இடறிக் கொண்டு பாதி இரவில் வந்து, எம் கொங்கையில் பொருந்தி, தம் வருத்தம் நீங்கிட, எம் உடலைத் தழுவி, இரவெல்லாம் இங்ஙனம் இனிமையாய் விளங்கிய நண்பினை, வளை நெகிழவும், நம் துன்பம் பரவி வருத்தவும் பின் அவர் வெறுத்தலை நாம் அறிந்தோம் அங்ஙனமாயின், கொண்டல் தவழும் பக்க மலையில் இளம்பெண் யானை தனது முதிர்ந்த முதல் கருவை ஈன்று கரும்பைத் தின்னும் தன் உடலைத் தன்னிடம் விருப்பம் உடைய ஆண் யானை தடவிக் கொண்டிருக்க, வாழைகளை உடைய அழகிய பக்க மலையில் உறங்கும் சாரலைப் பெற்ற அத் தலைவனது மென்மையான மார்பை அவர் முன்பு வந்து எம்மை முயங்குந்தோறும் முயங்குத் தோறும் அவர் வருந்தும்படி இரண்டு கைகளாலும் அள்ளிக் கொண்டு நம் மார்பின் உள்ளே அடக்கியிருப்போம். ஆனால் அது கழிந்து விட்டது" என்று தலைவியும் தோழியும் கலந்துரையாடினர்

445. தலைவன் அன்பு முதல்நாள் போன்றதே

முளை வளர் முதல மூங்கில் முருக்கி
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை
நீர்நகை மருங்கின் நிறம்பார்த்து ஒடுங்கிய
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக்
குருதிச் செங்கோட்டு அழி துளி கழாஅ
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால்
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின் புரைத் தக்க சாயலன் என, நீ
அன்பு உரைத்து அடங்கக் கூயி இன் சொல்
வாய்த்தன - வாழி, தோழி - வேட்டோர்க்கு