பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

105

எவன்கொல் - வாழி, தோழி! - கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே?

- மதுரை மருதன் இளநாகனார் அக 368

தோழி! “காலில் செருப்பை அணிந்த வேடன் சுட்டெரித்த அகன்ற கொல்லையில் கரிந்த இடங்களைக் கழுவிய மழை ஈரத்தில், இதழ்கள் வளர்ந்த பசிய தினையின் நீண்ட கதிர்களைக் காவலை மேற்கொண்டிருக்கும் ஒளியுடைய வளையலை அணிந்திருக்கும் மகளிர், அம் மங்கையர் ஊசலாட வேண்டிக் கிளைகளை வெட்டிய கொம்பின் மலர்க் கொத்துகள் நிரம்பிய குன்றின் பக்கத்தில் உள்ள நீண்ட அடியையுடைய வேங்கை மரம், இளம் மயிலின் உச்சியில் உள்ள குடுமியைப் போல் தோன்றும் இத் தன்மையுடைய மலை நாட்டையுடைய நம் தலைவர், உயர்வான மலைப் பக்கத்தில் உள்ள காந்தள் செடி பொருந்திய சோலையான குரங்குகளும் ஏறி அறியாத நீண்ட மரங்கள் செரிந்த காடு அதில் விளக்கம் பொருந்திய சுனையில் பளிங்கு போன்ற இனிய நீரில் பெண் யானையுடன் கூடிய ஆண் யானை போல நம்முடன் பல நாள்கள் கூடி நம்மைப் பிரிந்து வேறு இடம் சென்றான் அங்ஙனம் நிகழ்ந்த சில நாள்களுக்கு முன்பே அந்நிகழ்ச்சி முறை முறையாகப் பெருகியது அழகிய மூங்கில் குழாயில் உள்ள முதிர்ந்த தேனான கள் தெளிவை வண்டுகள் மொய்க்கும் மாலையுடையவராக கண்டு மகிழும் சிற்றூரில், பலர் வாயிலும் பேசப்பட்டு, கொங்கு நாட்டினர் மணியை இடையில் கட்டிக் கொண்டு தெருவில் ஆடும் உள்ளி விழாவின் ஆரவாரம் போன்ற அலராக ஆயிற்று! இதற்கு என்ன காரணமோ!” என்று பக்கம் இருக்கும் தலைவன் கேட்ப தோழி கூறினாள்

453. அரியவளாய் தலைவி உள்ளாள்

அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப
பெருந்தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண்