பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து வருந்தினம்மாமோ எனினும், அஃது ஒல்லாய்
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல்
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்
பெருந் துடி வள்பின் வீங்குபு, நெகிழா
மெய் மணி இழந்த பாம்பின், நீ நனி
தேம்பினை - வாழி, என் நெஞ்சே! - வேந்தர்
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே.

- பரணர் அக 372

“என் நெஞ்சே, வாழ்க! பாழி மலை மற்றவரால் அழிப்பதற்கு அரிய முறையையுடைய கடவுளால் காக்கப்படுவது, பெரிய தேன் கூடுகள் தொங்குவது, நாட்டின் எல்லையைக் காண்பதற்குரிய உச்சியையும் அகன்ற இடத்தையும் உடையது. அச்சம் பொருந்திய பக்க மலையைக் கொண்டது. அப்பக்கமலையில் பழைய வேள்விக்குடி மக்கள் தம் அகன்ற ஊரில் அரிய அணிகலமாகிய செல்வம் மறைத்து வைத்தனர் அத்தகைய செல்வத்தைப் போன்று பெறுவதற்கு அரியவளின் இன்பத்தை நினைந்து நாம் வீணே வருந்தியுள்ளோம் என்று நான் கூறினேன் கூறவும் அதனை நீ கைவிடுவதற்குப் பொருந்தாமல், பெரிய கிளையில் கட்டப்பட்ட, பலரும் ஆடும் ஊசலினது ஏறியும் இறங்கியும் ஆடுகின்ற கயிற்றைப் போன்று செல்லுதலாலும் வருவதாலும் வருந்தி நீண்ட வழியையுடைய குதிரை மலைக்குத் தலைவனான ‘அஞ்சி’ என்பவனின் கடிய பகைப்புலத்தை வருத்திய வில்லையுடைய வீரர் தம் பகைவர் நிரைகளைக் கவரும் போரில் ஒலி மிகும் படியாய் அடிக்கும் பெரிய உடுக்கையின் வாரைப் போலச் செறிந்தும் நெகிழ்ந்தும் மேய்தற் பொருட்டு உமிழ்ந்து வைத்த மணியை இழந்த பாம்பைப் போல் நீ மிகவும் வாடினாய்