பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன்

117

நீர் நிலையுள் உள்ள நீல மலர் போன்ற மை பூசப்பெற்ற கண்களை உடையவளே! நான் சொல்வதை மனத்தினால் ஆராய்ந்து பார் தனக்கு நிகரில்லாத தலைவன் ஒருவன் வலிமை வாய்ந்த யானை முதலியவற்றின் அடிச்சுவட்டைத் தேடுபவன் போல் வந்தனன் அவன் கட்டப்படுதலில் மாட்சி மையுடைய மாலையை உடையவன். வில்லை உடையவன் இங்ஙனம் வந்தவன் என்னைப் பார்த்துத் தான் அடைந்த நோயைக் குறிப்பால் யான் உணரக் கூறினான் அங்ஙனமின்றி வாயால் கூறவில்லை

பல நாள் இவ்வாறு வந்து போவான் அதைக் கண்டு அவனே அல்லாது அவனிடம் மிக்க உறவில்லாத எனக்கு இவனது எண்ணம் யாது என்ற நினைவு எழுந்தது நான் துயில் பெறாதவள் ஆனேன் துன்பத்துள் ஆழ்ந்தேன் அவனோ தன் குறையை நம் எதிர் நின்று கூறவில்லை நாமோ நின் வருத்தம் கண்டு யாங்களும் வருந்தினோம் எனக் கூறுவது நம் பெண் தன்மைக்கு உகந்தது அன்று அவன் வருத்தத்தால் இறந்து படுதலும் உண்டென்று எண்ணினேன்

இடையில் ஒருநாளில் என் தோள்கள் மெலிந்து நான் அடைந்த வருத்தத்தால் துணிவுடன் செய்யக் கூடாத ஒன்றைச் செய்து நாணமற்றவள் ஆனேன். அஃது என்ன வென்றால், நல்ல நெற்றியையுடைய தலைவியே தினைப் புனத்து இனமான கிளிகள் தினைப் புனத்தில் வந்து உண்ணாமல் கிளியை ஓட்டிப் பாதுகாக்கும் புனத்துக்குப் பக்கத்தில் இடப்பட்டிருந்த ஊசலில் அமர்ந்து ஆடினேன். அந்த நாளில் அங்கு வந்தவனை, ‘ஐயனே! சிறுபொழுது என்னை ஊசலில் ஆட்டுவாயாக’ என்று யான் சொன்னேன் அவனும் அதற்கு உடன் பட்டான் பெண்ணே! நீ கூறியது நன்று’ என்று ஊசலை ஆட்டினான் அது போழ்து நான் என் கை நெகிழப் பெற்ற வளாய் விழுவது போல் அவன் நினைக்கும்படி பொய்யாய் அவன் மார்பில் விழுந்தேன் அவன் அதை நான் நெகிழப் பெற்று விழுவதாகவே உண்மையாக எண்ணினான் விரைய என்னை அனைத்துக் கொண்டான். அப்போழ்து என் மெய் வருத்தத்தை உணர்ந்து யான் அறிந்து மயக்கம் நீங்கி எழுந்திருப்பேனாயின், பிறர் அறிவார் என்று அவன் எண்ணி விரைய 'ஒளியுடைய