பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

121



அவரும் தெரிகணை நோக்கி, சிலைநோக்கி,கண் சேந்து
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி,
‘இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை.

தெரியிழாய் நீயும் நின் கேளும் புணர,
வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து
குரவை தழிஇ யாம் ஆட, குரவையுள்
கொண்டு நிலை பாடிக்காண்.

நல்லாய்!
நல் நாள் தலைவரும் எல்லை, நமர் மலைத்
தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர்கொல்?

புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில்,
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?
நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொலோ?
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழங் கேண்மை
கண்டு அறியாதேன் போல் சுரக்கிற்பென்மன் கொலோ?

மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்
கையால் புதை பெறுஉம் கண்களும் கண்களோ?
 
என்னை மன் நின் கண்ணால் காண்பென்மன், யான்.

நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக, என்கண்மன.
என ஆங்கு

நெறி அறி. செறி குறி புரி திரிபு அறியா
அறிவனை முந்துறிஇ,
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனமாக,
வேய் புரை மென் தோட் பசலையும் அம்பலும்,
மாயப் புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்க,
சேய் உயர் வெற்பனும் வந்தனன்;
பூ எழில் உண் கணும் பொலிகமா, இனியே - கலி 39