பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

நீண்ட உயர்ந்த மலையை உடைய நம் தலைவனும் நூல் நெறியால் அறிந்த இருவரும் கூடுவதற்கு ஏதுவான வேளை வேறுபட்டுத் தப்புதலை அறியாத கணியனைக் கொண்டு அழகு மிகும் தொகுத்துக் கூறல் வகுத்துக் கூறல் ஆகியவற்றை அறியும் சான்றோர் தனக்குச் சுற்றமாக விளங்க, மூங்கிலைப் போன்ற நம் மென்மையான தோளில் உண்டாகும் பசலையும் ஊரவர் கூறும் அம்பலும் கனவில் கூடும் பொய்யான கூட்டமும் நீங்குமாறு வந்தான் நின் மலர் அழகையுடைய கண்ணும் பொலிவு அடைக

462. மணக்க வந்தான் மெய்ம்மலி உவகையன்!

“அகவினம் பாடுவாம், தோழி -அமர் கண்,
நகை மொழி, நல்லவர் நானும் நிலை போல்,
தனை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ
முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின் வயின் ஒச்சி,
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி,
அகவினம் பாடுவாம் நாம்.
ஆய் நுதல் அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள்,
தேன் நாறு கதுப்பினாய்! யானும் ஒன்று ஏத்துகு -
வேய் நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை.
கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்,
எடுத்த நறவின் குலை அலங்காந்தள்
தொடுத்த தேன் சோர, தயங்கும் தன் உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை.
கல்லா கடுவன் கணம் மலி சுற்றத்து,
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே -
தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும்
அல்லற்பாடுவான் மலை.
புரி விரி, புதை துதை, பூத் ததைத்த தாழ் சினைத்
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட நோய் செய்தான்
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்.
விண் தோய் வரை, பந்து எறிந்து அயா விட,
தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே