பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன் :

159

கொள்ளாதபடி பெண் வடிவம் கொண்டு வந்த இயமனோ’ இதனை ஆராய்ந்து பார். கொடி போன்ற நுட்பத்தையும் எட்டுக் கோவையான மேகலையையும் சில பூத்தொழிலை யுடைய ஆடையையும் உடுத்தியவளாய் இவள் உள்ளாள் ஆதலால் குழந்தைப் பேறின்றி வறுமைப் பட்டவரின் செல்வ மகள் இவள் ஆவாள் இவளைக் காத்து வந்தவர்கள் இப் போது காவாமல் புறப்பட விடுதல் கொடியதாகும்

இனி இவளைத் தடுத்து நிறுத்தி, “நல்லாய் யான் கூறுவதைக் கேட்பாயாக!” என்று பேசிப் பார்ப்போம்

“கண்டவர் காதல் கொள்வதற்குக் காரணமாகிய மான் போன்ற பார்வையையும் மடப்பத்தையும் உடைய நல்லவளே! சூட்டு மயிரையுடைய அன்னம் போலவும், அழகிய பெடையையுடைய மயிலைப் போலவும், நடையும் சாயலும் மடப்பமும் என்னும் நலங்கள் பொருந்திய உன் எழிலானது, உன்னைக் கண்டவர்களை மயக்கம் கொள்ளச் செய்துவிடும் இத் தன்மையை நீ அறிவாயோ! அறியாயோ!

“வளைந்த முன் கையையும் வெள்ளிய பற்களையும் பெற்ற அழகிய நல்லவளே! நிறத்தினாலும் திரட்சியினாலும் அழகினது நுண்மையைக் கொண்ட மூங்கில் போலவும், மென்மையால் நுட்பமான துகிலையுடைய அணை போலவும், காமக் கடலை நீந்ததற்குத் தெப்பமாதலால் நீரைக் கடக்கும் வேழங் கோலால் ஆனதெப்பம் போலவும்,உள்ள நின்பெருமையுடைய மென்மையான தோள்களை நின்னைக் கண்டவர்க்கு வருத்தம் உண்டாக்கும் என்பதை நீஅறிவாயோ, அறியமாட்டாயோ!

‘மயிர் நேரிதான வரிகளை உற்ற முன்கையையும் மடப்பத்தையும் உடைய நல்லவளே முற்றின கோங்க மரத்தின் அரும் பைப் போலவும், அடி வரைந்து கண்ணுக்குப் புலப்படும் குரும்பையைப் போலவும் விளங்குவன பெருத்த நின் இள முலைகள் அவை நின்னைக் கண்டவர்களின் உயிரை வாங்கிக் கொள்ளும் இந் நிலைமையை நீ அறிவாயோ, அறியாயோ’

என்று நான் கூறினேன், கூற -

‘நீ மயக்கம் கொண்டவன் போல மற்றவரின் வருத்தத்தை அறியாது, கேட்டவர்க்கு எதையும் சொல்லாது போகின்றவளே! இப்போது நான் சொல்வதைக் கேட்பாயாக! நீ குற்றம்