பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

187

வார் கோல்

உடு உறும் பகழி வாங்கி, கடு விசை,
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்,
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர,
புள்ளி வரி நுதல் சிதைய, நில்லாது,
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் - நெடு வேள்
அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்ப,
திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய
துணை அறை மாலையின், கை பிணி விடேனம்,
நுரையுடைக் கலுழி பாய்தலின், உரவுத் திரை
அடும் கரை வாழையின் நடுங்கப், பெருந்தகை
‘அம் சில் ஒதி அசையல்; யாவதும்
அஞ்சல் ஒம்பு நின் அணி நலம் நுகர்கு” என
மாசு அறு சுடர் நுதல் நீவி, நீடு நினைந்து,
என் முகம் நோக்கி நக்கனன்.

தலைவி - தலைவன் கூடல்

அந் நிலை,
நானும் உட்கும் நண்ணுவழி அடைதர,
ஒய்யெனப் பிரியவும் விடாஅன், கவைஇ
ஆகம் அடைய முயங்கலின், அவ் வழி,
பழு மிளகு உக்க பாறை நெடுஞ் சுனை,
முழு முதற் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென,
புள் எறி பிரசமொடு ஈண்டி, பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்,
நீர் செத்து அயின்ற தோகை, வியல் ஊர்ச்
சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி,
அரிக் கூட்டு இன் இயம் கறங்க, ஆடு மகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்,
வரை அரமகளிரின் சாஅய், விழைதக,
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய், நன் பல
வம்பு விரி களத்தின் கவின் பெறப் பொலிந்த
குன்று கெழு நாடன், எம் விழைதரு பெரு விறல்,