பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

கொம்புடைய யானைகளும் தொல்லை தரும் என்று எண்ணி தலைவி வருந்துகின்றாள். மேலும், இடியும், கொடுந் தெய்வங்களும் இரை தேடும் பாம்புகளும், நீர்ச் சுழியில் திரியும் முதலைகளும், ஆறலைக் கள்வர் சூழ்ந்து, கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கு நிலங்களும், திரும்ப வழியின்றி முட்டும் இடங்களும், பேய்களும், மலைப் பாம்புகளும் இவை அன்ன துன்பம் தரும் பிறவும் தலைவன் வரும் வழியிலுள்ள மலைவிட ரகத்தில் இருக்குமே என்றும் கலங்குகின்றாள். நினைக்கும் போதே இவள் வலைப்பட்ட மான் போல் உள்ளம் நடுங்கி ஊர் அலர் கூறுதலுக்கும் அஞ்சி, இரவுக் குறியில் கூடுவதற்கு வருந்தித் துடிக்கின்றாள்

பெரும் மழைச் சாரலில் இதழ் அழகு கெட்டு, வாடிய மலர் போலக் கவின் இழந்து இமை சோர்ந்து நீர் துளிக்கக் கலங்குகின்றாள் அன்னையே அறிவாயாக!