பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

197

தொடியுடை மகளிர் விளக்கைக் கொளுத்தி மாலைக் காலத் தொழிலை நிகழ்த்தினர் காட்டில் வாழ்வோர் வானைத் தீண்டும் உயரமான பரண்களில் தீக்கடைக் கோலால் நெருப்பை உண்டாக்கி எரிக்கத் தொடங்கினர்

முகில் மலையிடத்துச் சூழ்ந்து கறுத்துத் தோன்றியது காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் கல் என்னும் ஒசை உடையனவாய் ஒன்றற்கொன்று மாறி மாறிக் கூப்பிடத் தொடங்கின பறவைகள் கூடுகளில் செய்யும் ஆரவாரம் பகை வேந்தன் போருக்குச் செல்லும் அரவத்தை ஒத்திருந்தன இவ்வாறு மாலைக் காலம் விரைந்து வருதலைக் கண்டான் தலைவன்

உடனே, “விளங்குகின்ற நின் முன் கையினைப் பற்றி.உங்கள் பெரியோர் தர, சில நாள்களில் நாடறி நன் மணம்’ அயர்வோம்; கலங்க வேண்டா இலங்கிழையீர்!” என்று பிரிவுடை நன்மொழிகளைத் தீர்மானமாகக் கூறினான். ஆவினைப் புணர்ந்த காளை போல, விடாமல் எங்களுக்குத் துணையாக வந்தான் முழவு ஒசை குன்றாத பழைய நம் ஊரின் வாசலில், பலரும் நீருண்ணும் துறையிலே எம்மை விட்டு, மீண்டு போயினன்!

வழியருமை தலைவி கலங்குதல்

அன்று தொடங்கித் தொடக்க நாள் போன்ற விருப்பமுடன் நாளும் இரவுக் குறியில் வருதலைத் தலைவன் இயல்பாகக் கொண்டு விட்டான் அப்படி வரும் போதெல்லாம், ஊர்க் காவலர் இடைப்பட்டாலும், காவல் நாய் குரைத்தாலும், தலைவியின் மூங்கிலன்ன மென் தோளில் பெறும் இன் துயில் பெறாது போவான் பிழைக் குறியால் கூடிடாமல் திரும்பி விட்டாலும் அதற்காக வெறுத்தலைச் செய்யான் அவன் இளமைப் பருவம் கடந்தவனும் அல்லன் செல்வச் செருக்கால் என்றும் தன் குலத்திற்குரிய நற்குண ஒழுக்கங்களிலிருந்து நீங்கியவனும் அல்லன் ஆனால், இரவுக் குறியில் வரும் தலைவனைக் குகையில் மறைந்திருக்கும் புலிகளும், யாளிகளும், கரடிகளும் உள்ளே துளையுடைய