பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

15

துறையில் கரையேறி, நள்ளிரவிலே இத்தகைய இடத்துக்கும் மக்கள் வருவாரோ! ஒருநாள் நீ துன்பம் அடையினும் என் தோழி மறுநாள் உயிர்வாழ மாட்டாள். சிறிதும் துன்பம் - இடையூறு இல்லாத நல்ல வழிகளிலும் அங்குப் பலகாலும் போய் வருபவர் நீடுதல் இல்லாது தவறிவிடுதல் உண்டு. இவ்வாறு நின் வருகை எமக்கு எப்போதும் அச்சமே தரும் ஒன்றாக இருப்பதால், யாங்கள் மனம் சுழலும் வருத்தத்தை அடை வோம். அகன்ற மலையில் உள்ள வளைந்த மூங்கிலின் கணுக்களுக்கு உடையேயான இடத்தைப் போல யாம் போற்றி வளர்த்த தலைவியின் பெரிய மென்மையுடைய தோளை, எம் தோட்டத்தை அடுத்துள்ள வளைந்த தேன் கூடுகள் கட்டப் பட்டுள்ள குவடுகளுடன் உயர்ந்துள்ள பெரிய மலைச்சாரலில், பொருந்திய பழங்கன் பழுத்துத் தொங்கும் மரச் செறிவினுள், காந்தள் புதரில் பகற்காலத்தில் வரினும் நீ தலைவியைக் கூடுவாய்; எனவே துன்பம் மிக்க இரவில் வருதல் வேண்டா என்று இரவு வந்தானை பகலில் வருக எனத் தோழி இயம்பினாள்.


382. அறியாமையை எண்ணி நகைத்தேன்

அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரற் பொழுதில்
'படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த
சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
களிற்று -- இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,