பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

தன் குட்டித் தெய்வங்களை வழிபடுவதிலும், சின்னஞ்சிறு பரம்பரைப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதிலும் மன நிறைவு கொள்ளும் சிறிய ஆள். ஆனால் மனிதன் என்பவனோ உலக வாழ்வின் நலம் அனைத்திலும், குழப்பம் அனைத்திலும் கருத்துங் கவலையும் கொண்டவன்'.

'கடவுளென்றோ, உண்மை யென்றோ, மெய்ப்பொருளென்றோ அல்லது அதனை வேறு எப்பெயர் கொண்டு அழைத்தாலும் சரி, அத்தகைய பொருள் ஒன்று உண்டா என்ற கேள்விக்கு விடைகூற, நூல்களாலோ சமய குருமார்களாலோ, தத்துவ மேதைகளாலோ ஒரு பொழுதும் முடியாது. நீங்களேதான் அதற்கு விடை கண்டு பிடிக்க வேண்டும். அதனால்தான் ஒருவன் தன்னைத்தான் முதலில் அறிந்தாக வேண்டும். தன்னைத்தான் அறிவதே மெய்யுணர்வைப் பெறுவதற்கு முதற்படியாகும்'.

சமூக மதிப்பினைப் பாராட்டும் எந்த மனிதனாலும் எல்லையற்ற அளவிடற்கரிய அந்த மெய்ப்போருளை அணுக முடியாது. உண்மை, பாதைகளற்ற ஒரு பிரதேசமாகும். எப்பேர்ப்பட்ட சமயங்களினாலும் இதனை அடைய முடியாது' இத்தகைய கருத்துக்களை இவர் அள்ளி அள்ளி இறைக்கிறார் .

இராதாகிருஷ்ணனும் ஒரு மேதை; ஜே. கிருஷ்ண மூர்த்தியும் ஒரு மேதை; ஆயினும் ஒரு மேற்கோள் மனிதனை இலக்கிய புருசனை இவர்கள் படைக்கவில்லை; படைக்க முயலவும் இல்லை; ஆனால் சரத்சந்திரர் 'விஜயா' என்ற தம் புத்தகத்தில் 'நரேந்திரன்' என்ற ஒரு ஆதர்ச உதாரணப்புருசன், மெய்ப்பொருளை- கடவுளை - தன்னைத் தானறிந்த ஒரு மகா புருசனை ஒரு ஏழைப் பிராமண வாலிபனாகச் சித்தரித்துக் காட்டுகிறார்; அச்சமற்ற, ஆளுமைத் திறன் மிக்க எந்த நிலையிலும் மனம் நொந்து மறுகாத, தியாக உள்ளமுடைய , படிக்கும் மக்களாகிய நாம் நிலையாக நெஞ்சில் வைத்து நேர்ந்து பின்பற்ற வேண்டிய, எண்ணம் சொல்