பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பு ர வ ல ன்
இயல்பு


காலையைக் காணுங் கால் செங்
கமலமாய் மலர்ந்தென் னுள்ளம்,
மாலையைக் காணுங் காறும்
மௌனமாய் மனையில் குந்திச்
சோலையிற் காணுஞ் சுத்தச்
சுதந்திரக் குயில்போல் சோரா
தாலையிற் காணுங் கன்ன
லமிழ்தெனக் கவிதை யாப்பேன்.

நோன்று தன் வயிறு வாய்த்து
நுடங்கிடை நோயுந் தாங்கி
யீன்றதாய் மகவை யேந்தி
யிணை நகி லமிழ்த மீந்து,
தோன்றலாய்த் துலங்க வைக்கத்
துணையாகி வளர்ப்ப தொப்ப
ஏன்றபா வனைத்தும் நூலா
யிணைத்திலங் கிடச்செய் வேனே!