பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வானுற வளர்ந்திங் குள்ள
வாகையங் கோட்டில் வாய்த்த
தேனிறா லெய்தித் தென்பாய்த்
தின்பது தெரியா வூரில்,
தானுறு தரமோ ராத
தரித்திர' னென்று தாழ்த்தி
ஏனுற வினரு மென்னை
யிகழ்ந்தன ரென நா ஞேரேன்!

வாசிக்க வாழ்ந்தேன், வாய்மை
வசமாக்கும் நூல்கள் வாங்கி;
நேசிக்க நேர்ந்தேன், நேர்மை
நெறிமுறை நிலைபா டொன்ற;
யோசிக்க வுரைத்தே னேயா
துணர்ந்ததை யுற்றார்க் கேனும்
காசுக்கு வழிகா ணாத
கவிஞனா யுள்ளோன் நானே!

காலத்தைக் காசுக் காகக்
கரைத்திடும் கல்வி யாக்கி,
ஞாலத்தின் நலத்தை நாடி
நலமோர்ந்து பொலம கற்றிச்
சீலத்தைப் பேணச் செல்வர்,
செத்தபின் சீவன் சென்றம்
மூலத்தைக் காணும் மார்க்கம்
மொழிந்திட விரும்பு கின்றார்!

தெள்ளிய தமிழைத் தேர்ந்து
தேசத்தின் மாசைத் தீர்த்தற்
கொள்ளிய தேனீ யொப்ப
வுழைக்கின்ற கவிஞ னூரில்
பிள்ளைகள் சோற்றுக் கேங்கப்
பெற்றவ ளாற்றற் கேங்க
எள்ளியே வொதுக்கு கின்றார்,
இதயமொன் றில்லா தோ ராய்!