பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36



"அன்னை நீ யிரண்டு மக்கட்
கருமந்தத் துணையெ னக்கும்!
தென்னையின் தேவை தண்ணீர்;
தெளிகஎன் தெவிட்டாத் தேனே!
என்னைநா னறிவேன்; ஏந்தி
யிதயத்தி லெனைவைப் பாருண்
டுன்னைநான் காப்ப தின்றென்
னுயிர்காப்ப தொப்ப தன்றோ?

வினைவிட்டுப் பிரியா தென்றும்
வீட்டினில் விளக்கை யேற்றி,
உனை விட்டுப் பிரியா தொன்றி
உவக்கும்நம் மக்க ளோடும்
எனைவிட்டுப் பிரியா துள்ள
இன்பமே! இல்விட் டேகல்
தனை விட்டால் நான், நம் வாழ்வே
தடம்விட்டுத் தவிக்கு" மென்றேன்