பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48


தாயாகத் தந்தை யாகத்
தம் மருங் குழந்தை யொன்று,
வாயாகி வயிற மாகி, -
வாந்தியைச் செய்த வாறே
நோயாகிப் படுக்க நேர்ந்தால்
நொந்தோராய் நுவல்வர் குந்தி:
'சேயாக மாறிற் றெங்கள்
சீவன் தான் வந்திங்' கென்றே.

கடலையே வொத்துற் றோர் , கண்
கலங்கியே கதறி னும் நான்
'உடலையே விட்டுச் செல்லும்
உயிரெ'ன வூரை விட்டின்
றிடலேயேற் றிருக்கும் வள்ளல்
இருப்பிட மடுத்தி ரந்தெம்
குடலையே குதறிக் கொல்லும்
கொடும்பசி தடுக்கச் செல்வேன் .

மாமர மலர்ச்சி மாந்தி
மகிழ்வுறுங் காலை, மல்கத்
'தாமரை தளைய விழ்ந்து
தாரையாய் மதுவார்த்' தென்னப்
பாமுறைப் படி, தேன் பாகாய்ப்
பரவசப் படும்பண் பாடக்
காமுறு மரங்கை விட்டுக்
கவிக்குயில் கடக்கப் போமோ?

கல்லொத்துங் கனியை யொத்தும்
கருத்துகட் கினக்கங் காணற்
கெல்லொத்து மிலங்கா நிற்கும்
என்மன மிசையு மேனும்,
வெல்லத்தை விட்டுச் செல்ல
விரும்பாத ஈயா யின்றிவ்
வில்லத்தை விட்டுச் செல்லற்
கென துகா லிசையுங் கொல்லோ!