பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விருந்து


கம்பலை கரைந்து கட்டுக்
கடைவாயில் காலி யாகச்
செம்பில் நீர், செல்விக் குஞ்சைச்
சேர்த்திடை நுடங்கச் சீர்சால்
கொம்பெனக் கொண்டு, கொம்பில்
குயிலெனும் குரலில் கோதை,
‘கும்பலா லுணவும் கொள்ளக்
கூடாத குடிலிஃ' தென்றாள்.

'ஈ'யென்று கேட்பார்க் 'கில்லை'
யென்னாதா னில்லத் தீச்சம்
பாயொன்ற இலையும் போட்டுப்
பருக நீர் வைத்துப் பாங்காய்,
வேயொன்று தோளாள், நெஞ்சில்
விருப்பமு மரும்பி நிற்க,
ஆயன்று மோசி யோடும்
அமர்ந்தவா ரானோ மங்கே!

எனைவிட்டென் மனைவி, மக்கள்
ஏங்கியே யிருக்க, இங்கென்
மனைவிட்டு வந்து வாய்த்த
மாண்டகு விருந்தில்,- நண்பன்
தனைவிட்டன் றெனக்கு மட்டும்
தகுமென இட்டாள், தங்கப்
பனை வட்டு நையத் தட்டிப்
பசுவின்நெய் கலந்து வந்தே!

விருந்தென வந்தோர் குந்தி
விருப்பமாய் முதலி லுண்ணப்
பொருந்துவ தினிப்பே' யென்று
புரிபவர் தனை நான் போற்றி
யருந்தினே னார்வத் தோடும்;
அணங்கனா ளடுத் தன் போடு
‘கருந்தினைச் சோறெ'ன் றிட்டாள்,
கவின் முல்லை கலன் கண் டாங்கே!