பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

காடெலாம் கடுகி மேய்ந்து
காப்பிடம் வந்து சேர்ந்த
மாடெலாம், இரையை மென்று
மறுமுறை செரிக்கத் தம்மெய்
யூடெலா முறைந்தச் சாரம்,
உணும்பாலா யுதவல் போல், நான்
பாடலாய் வடிப்பேன் ; நீவிர்
பருகலாம், மறுநா" ளென்றேன்.

'பழுத்துறு கனியின் சாறோ ?
பாகு, பால், தேனே ?' வென்றே
வழுத்துறும் வகைய தான
வண் தமிழ்க் கவிதை யாத்திவ்
வெழுத்தறி வில்லார்க் கிங்கே
எமுறக் கூறற் கேற்ற , -
முழுத்துற வுற்றாய்ந் தோர்ந்த
முதல்தரக் கவிநா னன்றே!

'காய்வெட்டு வாழைத் தாறும்;
கனியாகப் பழுக்க விட்டே
ஒய்விட்டுத் தின்ன , நாளைக்
குங்களுக் களிப்பே' னென்று
தாய் விட்ட மாற்றங் கேட்டுத்
தயங்கிடும் தனை யர் தாமாய் ,
வாய்விட்டு வருஞ்சொல் லின்றி
வருத்த மா யிருந்தார், நின்றே!

மச்சியம் பாது விட்ட
மறை மிச்ச மில்லை; மாழ்கிக்
குச்சியம் பாது விட்ட
குறை மிச்ச மில்லை; கூறின் ,
உச்சியம் போது விட்ட
உருப்பத்தா லோய்ந்தென் னுள்ளம்
எச்சியம் பாது விட்ட
இருப்பினை யியம்பி னேனே.