பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

சம்பவாமி யுகே யுகே போன்ற பொய்கள் உபநிசத்தில் கிடையாது. ஒரு முறை தான் ஒருவன் பிறக்கிறான், வாழ்கிறான், மறைகிறான் என்பதற்கு வேண்டிய நிரூபணங்கள் உபநிசத்தில் உள்ளது. நமது முன் பிறவி நம் தாய் தந்தையர், நமது மறு பிறவி நம் பிள்ளைகள்; என்பது உபநிசத்தின் தெளிவான கருத்து.

பகவத் கீதையின் அடியொற்றி அத்வைத, துவைத, விசிஷ்டாத் துவைதங்கள் ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றி நாட்டிற்குத் துயர மூட்டிற்று. கோவிலும் குளமும் கொட்டும் முழக்குமாகச் சைவமும் வைணவமும் குடியேறிப் பக்தியும் பசக்க யுமாய்ப் பரிணமித்தன. எங்கள்சாமி பெரியது; உங்கள் சாமி சிறியது போன்ற சச்சரவுகள் சண்டைகள் சிறியதும் பெரிய துமாய் முளைத்து முற்றத் தொடங்கின, இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியால் நாடு நலிவுற்றது.

'ஓமித் யேதத்' - ஓம் என்பது ஒரு அச்சரம்; ‘ஏதத் த்யேவாச்சரம் ப்ரம்மம்' ஏதத் த்யேவாச்சாரம்பரம்' - இந்த அச்சரமே அபரப்பிரம்மம்; இந்த அச்சரமே பரப்பிரம்மம் என்கிறது உபநிசத்து. ஓம் என்ற அச்சரத்தின் பொருள் நான் என்பதே. ஓம், அகம், பிரணவம், பிரம்மம் ஆத்மா, கடவுள் என்பன ஒருபொருள் பலசொல். உபநிசத்தின் மகத்தான இந்த உண்மையை மறைத்து, வேதவியாசர், சங்கரர் ராமானுஜ மாத்வர்கள் ஏன் உருவ வணக்கங்களுக்கு மக்களைக் கூட்டிக் கொண்டு செல்லவேண்டும்? வைணவ சைவக் கோழிச் சண்டைகளை நாட்டில் மூட்ட இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தவர்?

'அரியதிகன் அரனதிகன் என்று சொலும் அறிவில்லோர் பரகதி சென்றடைவரிய பரிசேபோல் - எனக் கம்பனைப் பாட வைக்கும் அளவு நாடு ஒற்றுமை கெட்டது என்பது பொய்யாகாதே.

இரண்டாம் இராஜராஜ சோழன், 'எந்த ஒரு நிலையிலும் ஒரு வைணவனுக்குச் சைவன் ஒட்டு முறவுங் கொண்டு உதவி