பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஒத்தாசை செய்யக்கூடாது என்று கல்வெட்டுச் சாசனம் செய்து வைத்தான் என்றால் இது சைவ வைணவப் பகைமையின் உச்சகட்டமல்லவா? 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்ற பழமொழிப்படி இதற்குப் பிறகு தானே முஸ்லீம் படையெடுப்புகளனைத்தும், மற்ற அந்நிய படையெடுப்புகளும்; அடுத்து நாடும் அடிமையாயிற்று. நாமும் சுதந்திரம் இழந்தவாரனோம்.

உபநிசத் காலத்தில் வித்தையை நாடி வந்த பிரம்மச் சாரிக்குக் குரு முதலும் முடிவுமாக விவரித்து விளக்கி அனுப்பி வைக்கும் உபதேசம் 'அகம் பிரம்மாஸ்மி' - நானே பிரம்ம மாயுள்ளேன்; ‘தத்துவ மசி' - அதுவே நீ என்பவை தானே! அயம் ஆத்மா பிரம்மம்; பிரக்ஞானம் பிரம்மம் என்பனவும் பண்டைய வேதாந்த காலஉபதேசங்கள் - மகா வாக்கியங்கள் என்பது மறுக்க முடியாத உண்மைகளே யன்றோ?

சத்தியம் அடிப்படையாய் ஞானம் அனந்தம் வெளிப் படையாய் பிரம்ம ஞானம் எனும் இதனை அறவே கைவிட்டு அல்லது - மறைத்துவிட்டுச் சங்கரரும் ராமானுஜரும் 'ஓம் நம சிவாயம்' 'ஓம் நமோ நாராயண' என்று மாற்ற என்ன அவசியம் ஏற்பட்டது? நெருப்பும், நீருமாகிய (ருத்திரன் நாராயணன்) பூத வணக்கத்திற்கு மக்களை ஏன் உள்ளாக்க வேண்டும். மக்கள் ஆன்மீகத்திற்கு அருகதையற்றவராயினரா? தன்னைத் தானறியும் தன்மையில் நல்லது இல்லை; நெருப்பும் நீரும் தான் மக்களுக்கு இன்றியமையாதது என்று தீர்மானித் துச் செய்த பூசணிக்காயைச் சோற்றால் மறைத்த செயலா?

'அத்யத் தபோ தான - மார்ஜவ மகிம்சா சத்ய வசன மிதி' - தவம், தானம், நேர்மை , அகிம்சை , சத்தியம் ஆகிய இவ்வைந்தும் நாம் வாழ்க்கையில் மேற்கொண் டொழுக வேண்டிய இன்றியமையாத பண்புகள் என்பதை இவ்வாச் சாரிமார்கள் அறிந்திருக்கவில்லையா?

மனிதனை மகானாகச் செய்ய வல்ல இவ்வைந்து பண்புகளையும் கோர ஆங்கீரசர், தேவகி புத்திரனாகிய கிருஷ்ணனுக்கு