பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

சீவனைக் காணார் சென்று
சிவனைப்போய்க் காண்ப தெங்கே?
நோவன செய்து, நொந்து
நோன்புகள் நோற்பர்; நோற்கத்
தேவனெங் கே?யென் றால்நாவ
திடுக்கிட்டுத் திகைத்துத் தேரிச்
'சாவின் பின் சொர்க்கம் சென்று
சாமியைக் காண்ப தென்பர்.

'கீதையைப் படித்தால் போதும்;
கேட்டாலும் போதும்; கேட்ட
பாதையில் பயிலோம்; பண்ணும்
பாவனை போது' மென்று
பேதையைப் பெருக்கச் செய்து
‘பெருமைக்குக் கடைக்கா' லென்னும்
மேதையைச் சீர ழிக்கும்
மேதினி யாயிற் றின்றே!

ஊருற்று முடமை யுற்றும்
உற்றாருக் குதவா தோம்பிப்
பாருற்றுப் பழிக்க வாழும்
பயனற்ற பலபேர் பாவம்!
பேரற்றுப் பிணிக ளுற்றுப்
பிணமாகிப்- பிறவொன் றின்றி,
வேரற்று மரமும் வீழ்ந்து
விறகாகி வெந்த தற்றே!

'சாதிகள் ஈசல் கள்போல்
சகத்தினில் வளர்க! சாரும்
தீதுகள் தெரியா தூரைத்
தின்றுதேக் கிடுக! தேரிப்
போதக லாமுன் தெய்வப்
போதனை புரிக! அன்றேல்,
நீதிகள் நிலைத்திங் கென்னை
நீக்கிடு' மெனுமாம் நீசம்!