பக்கம்:அறப்போர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

டைச் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்ற புறநானூறும், பதிற்றுப் பத்தும் புறத்துறைகள் அமைந்த பாடல்களால் ஆகியவை. அகத்தின்கண் தோன்றி, இன்னதென்று வெளியிட்டுச் சொல்ல முடியாததாகிய காதலைப் பற்றிய செய்திகளை அகம் என்று வகுத்தனர் தமிழர். அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப் பொருள் நான்கில் இன்பம் என்பது அது. மற்ற மூன்றைப் பற்றிய செய்திகளும் புறப் பொருள் என்ற வகையில் அடங்கும். உணர்ச்சியைத் தலைமையாக உடையது அகம். செயலை எடுத்துரைப்பது புறம், புறத்தவர்களுக்கு வெளிப்படும்படியான நிகழ்ச்சிகள் நிகழ்வதனால் புறம் என்று வகுத்தார்கள்.[1]

புறத்துறைகளில் பெரும்பாலும் வீரத்தைச் சார்ந்த செய்திகளும் சிறுபான்மை அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்பவர்களுடைய இயல்புகளும் சிறப்புகளும் சொல்லப் பெறுகின்றன. அகப்பொருளைச் சார்ந்த பல வகைக் காமத்தைப் பற்றிக் கூறும் திணைகள் ஏழு. அவை குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந்திணை என்பவை. இவற்றில் ஒவ்வொன்றுக்கும் பல துறைகள் உண்டு. இப்படியே புறப் பொருளிலும் கினேகளும் துறைகளும் உண்டு. அகப்பொருள் சம்பந்தமான திணைகளைப் பற்றிய இலக்கணத்தை எல்லா இலக்கண நூலாரும் ஒரே மாதிரி கூறினர். ஆனால் புறப் பொருட் பிரிவில் இரண்டு வகைக் கொள்கைகள் பழங்காலம் முதற்கொண்டு


  1. 'இதனை (இன்பத்தை) ஒழிந்தன ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லோர்க்கும் துய்த்து உணரப்படுதலானும், இவை இல்லாது இருந்தெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறமெனலேபடும்’ - தொல்காப்பியம், அகத்தினை இயல், 1, நச்சினுக்கினியர் உரை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/5&oldid=1265811" இலிருந்து மீள்விக்கப்பட்டது