பக்கம்:அறப்போர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


பல்யாசகசாலை முதுகுடுமிப் பெருவழுதியாகிய பாண்டியனைப் பற்றிய பாடல் ஒன்றும், பாலைபாடிய பெருங்கடுங்கோ, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை என்னும் சேர அரசர்களைப் பற்றிய பாடல்கள் இரண்டும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பற்றியது ஒன்றும், அதியமான், குமணன் என்னும் குறுகில மன்னர்களைப் பற்றிய பாடல்கள் இரண்டும் இப் புத்தகத்தில் உள்ளன. ஒரு பாட்டில் கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியனைப் பற்றிய செய்திகள் இடையே வருகின்றன. இவற்றைப் பாடிய புலவர்கள் நெட்டிமையார், பேய்மகள் இளஎயினி, குறுங்கோழியூர் கிழார், ஆவூர் மூலங்கிழார், ஒளவையார், பெருஞ்சித்திரனுர் என்போர். இவர்களில் இளஎயினியாரும் ஒளவையாரும் பெண் மக்கள்.

அரசர்களின் வீரச் சிறப்பும் கொடைச் சிறப்பும் இந்தப் பாடல்களால் நன்கு விளங்குகின்றன. அரசர்கள் போர் செய்யப் புகுவதற்கு முன் பகைவர் மாட்டில் உள்ள ஆவினங்களுக்கும் அந்தணர், பெண்டிர், நோயாளிகள், புதல்வரைப் பெறாதோர் ஆகியவர்களுக்கும் துன்பம் இழைக்க விரும்பாமல், முரசறைந்து தாம் போர் செய்யப் போவதை அறிவித்து,அவர்களைத் தக்க பாதுகாப்புச் செய்து கொள்ளும்படி முன்கூட்டியே உணர்த்துதல் பழைய வழக்கம். போர் செய்யப் புகுந்தாலும் இத்தகைய அன்புச் செயல்களும் இருத்தலின் அக்காலப் போர் அறப் போராக இருந்த்து. 'அறத்தாறு நுவலும் பூட்கை மறம்' என்று புல்வர் இதைப் பாராட்டுகிறர். பகைவர்களுடைய அரண்களே முற்றுகையிட்டு வெல்லுதலும், அவர்கள் புறங்காட்டி ஞல் அது கண்டு மகிழ்ந்து போரை நிறுத்துதலும், எதிர்த்து நின்ற பகைவர் காட்டில் தீ வைத்து எரித்தலும், நட்புடையோர் காட்டை வளம் பெறச் செய்தலும், தம்முடைய பேராற்றலால் தினத்த காரியத்தை நினைத்தவாறே செய்து முடித்தலும் மன்னர்களின் வலிமையையும் வீர்த்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/10&oldid=1265816" இலிருந்து மீள்விக்கப்பட்டது