பக்கம்:அறப்போர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




அறப்போர்

இருந்து வருகின்றன. அகத்தியம், தொல்காப்பியம் என்ற நூல்கள் புறப் பொருளுக்கு ஏழு திணைகள் கூறின. அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பவை.

வெட்சித்தினை பகைவருடைய ஆநிரையை அவர் அறியாமல் கொணர்ந்து பாதுகாத்தலைச் சொல்வது. நாடு பிடிக்கும் ஆசையால் ஒரு மன்னன் மற்றெரு மன்னன்மேற் போர்க்குச் செல்லுதல் வஞ்சித்தினை. அரணை முற்றுகையிடுதலைச் சொல்வது உழிஞை. வீரச் சிறப்பு வெளிப்படும் பொருட்டு வேந்தர் பொருதல் தும்பை. அரசர் முதலியவர்களின் தொழிலைச் சிறப்பித்துச் சொல்லுதல் வாகை. நிலையாமையைப் புலப்படுத்துவது காஞ்சித் திணை. புகழ்தல் வகையாலும் வாழ்த்துதல் வகையாலும் பிறரைச் சிறப்பித்துப் பாடுதல் பாடாண்திணையாகும். இவற்றுள் ஒவ்வொன்றும் பல துறைகளாக விரியும்.

தொல்காப்பியர் கூறியவற்றில் சில திணைகளே இரண்டாகப் பிரித்தும், அவர் அகத்தைச் சார்த்திவைத்த கைக்கிளை பெருந்திணைகளையும் கூட்டியும், வேறு சிலவற்றைச் சேர்த்தும் புறப்பொருளைப் பன்னிரண்டாக வகுத்தனர் சிலர். அப்படிப் பகுத்து இலக்கணம் சொன்ன நூல்களில் பழமையானது பன்னிரு படலம். அதில் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வோர் ஆசிரியர் இயற்றினர் என்று தெரியவருகிறது. அது இப்போது கிடைக்கவில்லை. அந்த நூலை அடியொற்றி எழுந்த மற்றோர் இலக்கண நூல் புறப்பொருள் வெண்பா மாலை. அதனே இயற்றியவர் ஐயன் ஆரிதனுர் என்பவர். வீரசோழியம் என்னும் இலக்கணத்திலும் புறப்பொருளைப் பன்னிரண்டு பிரிவாக்வே அதன் ஆசிரியர் பிரித்து இலக்கணம் கூறுகிறர்.

புறநானூற்றில் உள்ள பாடல்களுக்குத் திணையும் துறையும் பழங்காலத்தில் வகுத்திருக்கிறர்கள். அவை புறப்பொருள் வெண்பாமாலையிற் கண்ட முறையையே தழுவியவை.

ii

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/6&oldid=1267369" இலிருந்து மீள்விக்கப்பட்டது