பக்கம்:அறப்போர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்



அரசர்களின் ஈகைத் திறனை உணர்ந்து புலவர்கள் பாராட்டினார்கள். கொடையிற் சிறந்த வேந்தர்களிடம் தமக்குப் பரிசில் வேண்டுமென்று குறிப்பாகப் புலப்படுத்தினர்கள்.மன்னர் சிறந்த பொன்னைக் கூத்தர்களுக்கு ஈந்தனர். மறம் பாடிய விறலியருக்குப் பொன்னணிகளேயும், பாணருக்குப் பொன்னாலான தாமரைப் பூவையும் வழங்கினர். புலவர்களேப் பாராட்டி, நிரம்பிய செல்வத்தை அளித்தனர். அதைப் பெற்ற புலவர்கள் அவற்றை நெடுங்காலம் சேமித்து வைக்கவேண்டும் என்று எண்ணாமல் எல்லோருக்கும் வழங்கி இன்புற்றார்கள். தம் மனேவிமாரிடமும், "எல்லோருக்கும் விருப்பப்படி கொடுங்கள்" என்று சொன்னர்கள்.

செல்வத்தைப் பெற்ற பயன் ஈதல் என்பதே அக்காலத் தமிழர் கொள்கை. ஆதலின் இயற்கையாகச் செல்வத்தைப் பெற்ற மன்னர் அதைப் பிறருக்கு ஈந்து களித்தனர். அவர்பால் செல்வம் பெற்ற புலவர்களும் தம்மைச் சார்ந்தோருக்கு அதைக் கொடுத்து மகிழ்ந்தார்கள். செல்வம் உள்ளவர்கள் பிறருக்கு ஈதலும் இல்லாதவர் அதனைப் பெறுதலும் இல்லாவிட்டால் அந்த நாடு விரும்பத்தக்க தன்று என்று தமிழர் எண்ணினர். வானுலகத்து வாழ்வில் அவை இன்மையால் அது சிறந்தது அன்று என்று கொண்டார்கள்.

அறம் பொருள் இன்பங்களால் சிறந்த வளப்பமான வாழ்வு வாழ்ந்த மக்களை இப்பாடல்களிலே பார்க்கிறோம். சின்னஞ்சிறு பெண்கள் பொழிலிலும் ஆற்றிலும் விளையாடினர்கள். தூய பொன்னால் அமைந்த கனமான அணிகளே அணிந்து கொண்டனர். பாவை அமைத்து அதற்குப் பூச்சூட்டி மகிழ்ந்தனர். ஆற்றங் கரையிலுள்ள பூம் பொழிலில் பூவைக் கொய்தனர். ஆற்றில் பாய்ந்து நீராடி இன்புற்றனர்.

பாணனுடைய யாழிசையும், விறலியின் ஆடலும் பாடலும், வயிரியருடைய கூத்தும், புலவர்களின் கவிகளும்

viii
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/12&oldid=1267385" இலிருந்து மீள்விக்கப்பட்டது