பக்கம்:அறப்போர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


ஒரு திறன் - ஒரு கூறு. ஆகின்று - ஆயிற்று. கரக்கும் - மறைப்பான். நுதல் - நெற்றி. வண்ணம் - அழகு. ஏத்தல் - துதி செய்தல். ஏமம் - இன்பம்; பாதுகாப்புமாம். அறவு - அறுதல். காகம் - கமண்டலம் போன்று அடங்கி நிற்கும் கங்கை; ஆகுபெயர். அருந்தவத்தோன்-சிவபெருமான்.

பெருந்தேவனார் இங்கே கார்நறுங் கொன்றை என்றது போலவே அகநானூற்றிலும், “கார் விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்” என்று பாடுகிறார். கண்ணி என்பது வீரத்துக்கு அறிகுறி, போரில் அடையாளப் பூவாகக் கொள்வது. போர்ச் செயலைப் பெரும்பான்மையும் எடுத்துக் கூறும் நூல் புறநானூறு. இதன் கடவுள் வாழ்த்தில் வீரத்திற் கேற்பக் கண்ணியை முதலில் நினைத்தார். தார் என்பது காதலுக்கு அறிகுறி; போகத்துக்குரியதென்று நச்சினார்க்கினியர் எழுதுவர். ஆதலின் வீரத்தைச் சொல்லும் புறப் பொருளும் காதலைச் சொல்லும் அகப்பொருளும் ஒருங்கே நினைத்த வாறாயிற்று.

சிவபெருமானுடைய தர்ம ரிஷபம் வெண்மையானது என்றும், பதினொரு ருத்திரர்களின் ஊர்திகளாகிய இடபங்கள் கரிய நிறம் உடையன வென்றும் தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூறுவர்.

வெற்றித் திறத்தைக் காட்டுவதாதலின் ‘சிறந்த சீர்கெழு கொடி’ என்றார், இறைவன்

10
10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/28&oldid=1460087" இலிருந்து மீள்விக்கப்பட்டது