பக்கம்:அறப்போர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெற்ற பரிசில்


சேரமான் பகைவர்களிடமிருந்து பல பொருளைப் பெற்றான். ஆனால் அவற்றைத் தனக்கென்று வைத்துக் கொள்ளவில்லை. தான் பெற்ற நாடுகளைத் தன் சேனைத் தலைவர்களுக்கும், துணை வந்த மன்னர்களுக்கும் பகிர்ந்து அளித்துவிட்டான். நாட்டின்மேல் ஆசையை மண் ஆசை என்று சொல்வார்கள். மண்ணுசை சேரமானுக்கு இல்லை. பொல்லாத மன்னர்களின் கொடுங்கோன்மையை மாற்ற வேண்டுமென்பதே அவன் ஆசை. ஆதலின் பகைவர் தோற்று ஓடியதனால் வந்த பொருளை அவன் தனக்கென்று வைத்துக் கொள்ள வில்லை.

பகைவர் விட்டு ஓடிய பொருள்களைப் பலருக்கும் வாரி வழங்கினான். ஆனால் பகைவர் பால் அவன் பெற்ற பொருள் ஒன்று உண்டு. அவர்களுடைய முதுகைப்பெற்றன். அவர்கள் தங்கள் முதுகைக் காட்டியதால் உலகத்துக் கெல்லாம் சேரமானுடைய விறலைக் காட்டின வர்களானார்கள். துப்பை (வலியை) உடைய எதிரிகள் புறத்தை மன்னன் பெற்றான். அவன் வேண்டியது அது ஒன்றுதான். வேறுயாதும் அன்று.

வெற்றி பெற்றுப் பகைவருடைய புறம் பெற்ற வேந்தனை எல்லோரும் பாராட்டினார்கள்.

49
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/67&oldid=1267435" இலிருந்து மீள்விக்கப்பட்டது