பக்கம்:அறப்போர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் புகழ்


யிலும் கூத்திலும் கூட இவருடைய அறிவு, ஆழ்ந்து சிறந்து நிற்கும் போல் இருக்கிறதே! என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தார்.

பின் ஒருநாள் அமைச்சர்களோடு புலவர் பேசிக் கொண்டிருந்தார். அமைச்சர்கள் அரசனுடைய கூரிய அறிவைப் பாராட்டினார்கள். “எத்தனையோ சிக்கலான சந்தர்ப்பங்களில் தெளிவு புலப்படாமல் நாங்கள் திண்டாடுவோம். அப்போது நம்முடைய மன்னர் பிரான் திடீரென்று ஒரு வழியைக் கூறுவார். அந்த உபாயத்தால் நிச்சயம் காரியம் கைகூடிவிடும். நாங்கள் யாவரும் சேர்ந்து மண்டையை உடைத்துக் கொண்டும் புலப்படாத வழியை அவர் சொல்லிவிடுவார். அவருடைய அறிவின் ஆற்றல் அளவிட முடியாதது” என்று சொன்னார்கள். இதையும் காது குளிரக் கேட்டார் புலவர். ‘இப்பேரரச ருடைய அறிவுக்கு நம்மால் எல்லைகோல முடியாது போலிருக்கிறது. எந்தத் துறையிலே புகுந்தாலும் சிறந்து நிற்கும் ஆற்றல் அவ்வறிவுக்கு இருக்கிறது’ என்று முடிவு கட்டினார்.

குடி மக்கள் பலர் ஏதோ ஒரு சிற்றூரில் ஒரு விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/77&oldid=1267446" இலிருந்து மீள்விக்கப்பட்டது